வடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக்கடிதங்கள் நேற்று தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு 15 இற்கும் மேற்பட்டவர்களுக்கு போலி நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இவை முதலமைச்சரால் வழங்கப்படவில்லை என்றும் அவ்வாறான நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண சபையால் நடத்தப்படவில்லை என்றும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மன்மதராசா தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் இணைப்புச் செயலாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திய செ.தனுபன் என்பவரே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளார். குறித்த 15 பேருக்கும் வவுனியால் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமனம் வழங்குவார் என முன்னர் மோசடி நபர் தெரியப்படுத்தி உள்ளார். ஆனாலும் அது இடமாற்றம் செய்யப்பட்டு நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குத் தெல்லிப்பழையில் நடைபெறும் என அவர் பின்னர் கூறியுள்ளார். நேற்றுப் பிற்பகல் அங்கு சென்ற 15 இற்கும் மேற்பட்டவர்களுக்கு குறித்த நபர் வேறு சிலருடன் இணைந்து கடிதங்களை வழங்கியுள்ளார். குறித்த கடிதம் வடமாகாண சபையின் கடித தலைப்பின் கீழோ முதலமைச்சரின் இறப்பர் முத்திரையோ இன்றிக் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடிதங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் சந்தேகம் கொண்டு, வடமாகாண சபை உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தி உள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற வடமாகாண உறுப்பினர்கள் இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது இந்தப் போலி நாடகம் அப்பலமாகியது. இந்தச் சம்பவம் குறித்து வடமாகாண சபை முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரைத்தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி ஒரு நிகழ்வு வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to வடமாகாணசபையில் போலி நியமனங்கள்!! கூட்டமைப்பு நிர்வாகத்தின் கையறு நிலை அம்பலம்!!