அன்டார்ட்டிக்காவில் பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த ரஷ்யாவின் ஆய்வுக் கப்பலில் இருந்த அனைத்து 52 பயணிகளையும் ஹெலிகாப்டர்கள் மூலமாக ஆகாய மார்க்கமாகப் பாதுகாப்பாக மீட்கப் பட்டு விட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அண்டார்டிகா நோக்கிப் புறப்பட்ட அகடமிக் ஷோகல்ஸ்கி என்ற இக்கப்பல் டிசம்பர் 24 அளவில் எதிர்பாராத விதமாகப் பனிப் பாறைகளில் சிக்கிக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து இக்கப்பலில் உள்ள பயணிகளை மீட்கும் விதமாக பனிப் பாறைகளைப் பிளந்து கொண்டு செல்லும் 'ஸ்னோ டிராகன்' என்ற சீனக் கப்பலும் அவுஸ்திரேலியக் கப்பல் ஒன்றும் உதவிக்குப் புறப்பட்டன. எனினும் மோசமான காலநிலையால் மீட்புப் பணிகள் தாமதமானதுடன் ஹெலிகாப்டர் மூலம் வான் வழியாகக் காப்பாற்ற வேண்டுமென்றாலும் ஒரே தடவையில் அனைவரையும் காப்பாற்றி ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் நிலவியது. இந்நிலையில் இன்று செவ்வாய்க் கிழமை சற்று மிதமான காலநிலை நிலவியதால் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இருந்த 52 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப் பட்டு அவுஸ்திரேலிய சரக்குக் கப்பலில் கொண்டு சேர்க்கப் பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பிரபலமான புவியியல் வல்லுனர் டக்லஸ் மாசன் 1911-14 ஆம் ஆண்டுகளில் அண்டார்டிகாவில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் உலகுக்கு மிகுந்த பலன்களை அளித்திருந்தன. இவரது சாகசத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் அண்டார்டிகாவுக்கு பயணம் செய்த ரஷ்யக் கப்பலான அகடமிக் ஷோகல்ஸ்கி என்பதே பனிப்பாறைகளில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் தாம் பாதுகாப்பாக மீட்கப் பட்டது தொடர்பில் இந்த சாகசப் பயணத்தின் தலைவர் கிறிஸ் டுர்னே கருத்துத் தெரிவிக்கும் போது, 'நாம் தற்போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம். இதற்கு சீன அரசுக்கும் அவுஸ்திரேலியாவின் அன்டார்டிக்கா பிரிவு மீட்புப் படையினருக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.' என்றுள்ளார்.

0 Responses to அண்டார்ட்டிக்காவில் சிக்கியிருந்த கப்பலில் இருந்து அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப் பட்டனர்