Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி சட்டசபையில் இன்று கொண்டுவரப்பட்ட ஆம் ஆத்மி கட்சி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ஆம் ஆட்சி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

  ஆம் ஆத்மி கட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு காங்கிரஸின் 7 எம்.எல்.ஏக்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  அதோடு ஒரு ஜனதா தாள் யுனைட்டட் எம்.எல்.ஏ, மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் ஆதரவும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கிடைத்தது.  இதன் மூலம் 37 வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்தன. பாஜகவிற்கு ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் ஆதரவுடன் 32 வாக்குகள் கிடைத்தன.

நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்திற்கு முன்னதான சட்டப்பேரவை விவாதத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நிகழ்த்திய உரை முக்கியத்துவம் பெற்றது. அவர் தனது உரையில், முன்னைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும். நேர்மையான அரசியல் திரும்ப கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது போராட்டமாக இருக்கிறது.

சாதாரண மக்கள் உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகளை கேட்கின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் 65 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. எனவே முடிவுகளை எடுப்பதில் பொதுமக்களும் பங்கு கொள்ள வேண்டும். நேர்மையான போக்கை விரும்புகிற ஒருவர் ஆம் ஆத்மி கட்சியில் இடம்பெறலாம். அரசியலுக்கு அப்பால் உள்ள சாதாரணமான மக்களாகவே எங்கள் கட்சியினர் உள்ளனர்.

நாளாந்த ஊழலையும், ஆளுமையற்ற ஆட்சித் திறனையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதோடு டெல்லியில் நிலவும் வி.ஐ.பி கலாச்சாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டெல்லியில் தூய்மையான ஆட்சி நில அனைத்து எம்.எல்.ஏக்களும் பொதுமக்களின் நண்பர்களாக இணைந்து செயற்பட வேண்டும். நாங்கள் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளோம். இது டெல்லியின் ஒவ்வொரு குடிமகனுடையதும் வெற்றி. டெல்லி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். எங்கள் முன்னால் பல சவால்கள் உள்ளன. அவற்றை வெற்றிகொள்ள இனி போராட வேண்டும் என்றார்.

பின்பு காங்கிரஸ் மாநிலத் தலைவர் அர்விந்த் சிங் லவ்லி பேசுகையில், டெல்லி மக்களின் நலனுக்கான நீங்கள் (அர்விந்த் கேஜ்ரிவால்) தொடர்ந்து முடிவுகளை எடுத்தால், உங்கள் அரசுக்கு அச்சுறுத்தல் இருக்காது. நல்லாட்சி நிலவும் பட்சத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் முழுமையான பதவியில் இருப்பதற்கு நாங்கள் ஆதரவு தருவோம். அதேவேளை நீங்கள் புதிய அரசு என்பதனை மனதில் வைத்திருங்கள். ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியங்களில் மாற்றம் செய்யக் கூடாது. உங்களை எவரும் தவறாக வழிநடத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

0 Responses to டெல்லி சட்ட சபை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com