மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த அக்டோபர் மாதம் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறித்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அந்தக் கும்பல் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளதுடன், புகாரை திரும்பப் பெறக் கோரி தொடர்ந்து மிரட்டிவந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி குறித்த மாணவி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறி, படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 31ம் திகதி இரவு உயிரிழந்த பின்னரே, அது தற்கொலை முயற்சியல்ல. குறித்த கும்பலைச்சேர்ந்தவர்களே அப்பெண்ணை தீவைத்துக் கொளுத்தியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வளவு தூரம் கொடுமை நடைபெறும் அளவு காவல்துறை மற்றும் அரசு இவ்விடயத்தில் மெத்தனப் போக்கு காண்பித்ததால், இது தொடர்பில் மாணவியின் தந்தை மருத்துவமனை நிர்வாகம் மீதும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது அப்பெண் மீது குற்றவாளிகளே மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்திருப்பதாக காவல்துறையினரும் தெரிவித்துள்ளதால் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதோடு குறித்த இளம்பெண் மரணமடையும் போது கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.

0 Responses to கொல்கத்தாவில் இளம் பெண் பாலியல் வல்லுறவு, கொலை வழக்கில் புதிய திருப்பம்