வடக்கு மாகாண சபை எந்தவித இடையூறுகளும் இன்றி கடந்த மூன்று மாதங்களாக சிறப்பாக செயலாற்றி வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநரின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மாகாண செயலாளர் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் இன்னமும் சிறப்பாக செயலாற்ற முடியும். மாகாண அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் முறுகல்களின்றி செயற்படுவது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார். மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் மாணவர்களின் கல்வி அபிவிருத்தி அதிகப்படியாக இருக்கின்றது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அரசாங்கம் சிறப்பான செயற்திட்டங்களை வடக்கில் முன்னெடுத்துள்ளது என்று ஜீ.ஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபை சிறப்பாக செயலாற்றுகிறது: ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி