கோத்தபாயவின் ஏற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சினால் கிளிநொச்சியில் நடத்தப்படும் பதிவு நடவடிக்கையில் நேற்று 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்துவிட்டனர் எனக் கருதி பதிவுகளை செய்துள்ளனர். காணாமற் போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவி னரால் (ரி.ஐ.டி) கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பதிவு நடவடிக்கையில் கலந்து கொண்ட 426 பேரில் 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்து விட்டார்கள் எனக் கருதி பதிவுகள் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
காணாமல் போனோர் விடயம் இலங்கை அரசிற்கு தொடர்ந்தும் தலையிடியாகவுள்ள நிலையில் காணாமல் போனோரை மரணமடைந்து விட்டதாக கருதி மரணச்சான்றிதழ் வழங்கி விடயத்தை அமுக்கி விட முயற்சிகள் தொடர்கின்றன. எனினும் காணாமல் போனோரது குடும்பங்கள் இதனை ஏற்றுக்கொள்ள இவ்வளவு காலமும் மறுதலித்து வந்திருந்தது.
இந்நிலையினில் காணாமற்போனோர் தொடர்பிலான மஹிந்தவின் விசாரணைக்குழு விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டத்தினில் இடம்பெறும் நிலையில், மறுபுறத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் இந்தப் பதிவு நடவடிக்கை பகிரங்கப்படுத்தப்படாமல் கரைச்சிப் பிரதேச சபையின் கூட்டுறவு மண்டபத்தில் நடத்தப்படடுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இறுதிப் போரில் காணாமற்போனவர்களின் தேவைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் நடத்திய விசாரணைகளுக்கு அமைய 426 குடும்பங்கள் இனங்காணப்பட்டதாகவும், அந்தக் குடும்பங்களே நேற்று பதிவுக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைவாக தம்மிடம் ஒரு வாரத்துக்கு முன்னர் சிலர் வந்து பதிவுகளை மேற்கொண்டதாகவும், அவர்கள் நேற்று (நேற்று முன்தினம்) எமது வீடுகளுக்கு வருகை தந்து இன்று (நேற்று) பதிவுக்காக வருமாறு தெரிவித்திருந்ததாகவும் அதற்கு அமையவே தாம் வருகை தந்தாகவும் அங்கு வந்த மக்கள் தெரிவித்தனர். நீதி சமாதானத்துக்கான அமைச்சு, அரச நிர்வாக அலுவல்கள் அமைச்சு, அரசபாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, வேலைவாய்ப்பு பணியகம், ஆள்பதிவு திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம் என்பன நேற்றைய இந்தப் பதிவு நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தன.
ஆசை வார்த்தைகள் அங்கு தாராளமாக வழங்கப்பட்டிருந்தது. காணாமற்போனவர்களை இறந்தவர்களாகக்கருதிப்பதிவு செய்தால் பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என்று மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. நஸ்டஈடு மற்றும் வீட்டு வசதி, கடன்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மக்களிடம் கூறப்பட்டு காணாமற் போனவர்களை இறந்தவர்களாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கை அங்கு முன்னெடுக்கப்பட்டது. இதனால் 110 பேர் காணாமற்போன தமது உறவுகள் இறந்தவர்கள் எனக் கருதி பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 7 பேருக்கு நேற்றே தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காசோலை வழங்கும் நிகழ்வில் ஜனாதி பதியின் புதல்வரும் நாடாளு மன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்டார். அத்துடன் பங்குபற்றிய 426 குடும்பங்களுக்கும் 10 கிலோ நிறையுள்ள உலர் உணவுப்பொதியும் வழங்கப்பட்டுள்ளது.

0 Responses to காணாமல் போனோருக்கு மரணச்சான்றிதழ்! கோத்தாவின் இரகசியத்திட்டம் அரங்கேற்றம்!!