Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமை விடயத்தில் எந்த முன்னேற்றங்களையும் அவதானிக்க முடியுவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்களம் விடுத்துள்ள காலாண்டு மனித உரிமைகள் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற மனித உரிமைகள் கண்காட்சியில் வடக்கில் இருந்து வந்த மக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வடமாகாணத்துக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேநேரம் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய ஊடகவியலாளர்களை இடைமறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.

இதேபோன்று திருகோணமலையில் கடந்த 2006ம் ஆண்டு ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கருத்தில் கொண்டு மாத்திரம் கைது செய்யப்பட்டிருந்த 12 சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், மாநாடு முடிந்தபின்னர் விடுவிக்கப்பட்டனர்.


இதுவே இலங்கை அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் மனித உரிமைகளுக்கான அந்தஸ்த்தை பெற்றுக் கொடுக்க சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை விடயத்தில் எந்த முன்னேற்றங்களும் இல்லை – பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com