காணாமற்போனோர் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில், காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழையும் வழங்கும் செயற்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இது சட்டவிரோதமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
காணாமற்போனவர்கள் தொடர்பில் கண்டறியும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கடந்த திங்களன்று (ஜனவரி 20) கிளிநொச்சியில் மேற்படி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் அதற்கு அருகில், காணாமற்போனவர்களின் உறவினர்களை அழைத்து மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு யார் அதிகாரமளித்தது? ஒருவர் காணாமற்போனால், அவர் இறந்துவிட்டார் என்பதை அவரது உறவினர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் இறப்பு பதிவாளர் அல்லது கிராம அலுவலர் ஊடாகவே மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால், இங்கு மக்களை வலிந்து அழைத்து வந்து அச்சுறுத்தி மரணச்சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. எனவே, இது முற்றிலும் சட்டத்திற்கு முரணான விடயமாகும். அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமற்போனவர்களுக்கும் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்றால், சரணடைந்தவர்களை அரசாங்கம் படுகொலை செய்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மரணச்சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஆணைக்குழு தலையிட்டு உடனடியாக நிறுத்தவேண்டும். இல்லையென்றால், அதன் உண்மையான நிலைமையினை நாம் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவோம் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் செயல் சட்ட விரோதமானது: த.தே.கூ