மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள குறித்த பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்று குறிப்பிட்ட அவர், குறித்த மனிதப் புதைகுழி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த வீதியொன்றில் நீர்க்குழாயொன்று பொருத்துவதற்காக தோண்டப்பட்ட போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரையில் 39க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், இராணுவத்தின் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளன.

0 Responses to மன்னார் மனிதப் புதைகுழிக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: தயா ரட்நாயக்க