இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் எம் உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், புலம் பெயர் சமூகமாக வீதிகளில் லட்சக் கணக்கில் நின்று போராடிய எம்மை புறக்கணித்து பாராமுகம் காட்டி கைவிட்டிருந்தபோது, எம்மால் உணரப்பட்ட எமக்கான அரசியல் அதிகாரத்தின் தேவை கருதி கனடிய தமிழ்ச சமூகத்தின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட தமிழ்ப பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சர்வதேச அரங்கினில் செய்யப்படவேண்டிய, செய்யப்படக் கூடிய அரசியல் வேலைகள் எதனையும் செய்யாமல் மற்றும் முன்னெடுக்கப்பட்ட வேலைகளை முடக்கியும் செயற்பட்டவர் இன்று எதிர்வரும் தேர்தல் ஆதாயத்துக்காக யாழ் வந்துள்ளமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்றுஎன புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் அவலங்களின்போது சர்வதேசத்தில் உள்ள பல நாடுகளில் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக லண்டன் மற்றும் கனடாவில் நடாத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் அந்நாடுகளில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டங்களாக நடந்தேறின.
இவ்வளவு பாரிய போராட்டங்களில் - அதாவது கனடா ரொரன்ரோவை எடுத்துக் கொண்டால் கனடாவின் மிக முக்கிய நகரமான ரொரன்ரோவில் நாட்களாக, மாதங்களாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்குபெற்றலுடன் நடைபெற்ற தொடர் ஆர்ப்பட்டங்களின் உச்சக்கட்டமாக ரொரன்ரோ பெருந்தெருக்களை முற்றுகையிட்டு நடாத்திய போராட்டங்கள் கனடாவின் பொருளாதார நகரமான ரொரன்ரோவை ஸ்தம்பிக்க வைத்தது. அவ்வளவுக்கு எமது கனடிய தமிழ்மக்களின் முழுப் பங்குபற்றலும் இருந்து வந்த போராட்டமானது. தமிழீழமக்களின் வரலாற்றில் என்றுமில்லாத இழப்பாக, பாரிய கொலைகளுடன் தமிழின அழிப்பு நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில் எம்மக்களின் முழுப்பலத்துடனும், பங்குபற்றலுடனும் நடைபெற்ற போராட்டங்களில் பங்குபற்றாத எவரும் ஒரு தமிழனாக இருக்க முடியாது.
ஆனால், மிகத் துரதிஸ்டவசமாக அப்போராட்டங்களில் கூட பங்குபெற்றாத ராதிகா என்பவரை(இவரை வேட்பாளராக நிறுத்தும் வரை இவர் இந்த விடயத்தை சொல்லவில்லை. பின்னர் இவ்விடயம் வெளிவர, இவர் தான் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகப் போகமுடியாது போனதெனவும், தான் இனிவரும் காலங்களில் எமது மக்களின் துயரங்களையும், அவர்களின் விடுதலைக்காக உழைப்பேன் என்கின்ற உறுதி பெறப்பட்ட பின்னரே ஆதரவு வழங்கப்பட்டது) தமிழர்கள் தமது குரலாக கட்சி பேதங்கள், கருத்து பேதங்களுக்கப்பால் ஒரு சமூகமாக நின்று மிகக் கடுமையான உழைப்பினூடாக தெரிவாக்கி வரலாறு படைத்ததும் பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே ராதிகா வெறுமனே தனது சொந்த லாபங்களுக்காக அப்பதவியைப் பயன்படுத்த தொடங்கியதானது இன்னுமோர் துரோகத்தனத்தை வெளிக்காட்டி இருந்தது.
எமக்கென ஒரு பிரதிநிதியை தெரிவாக்கும் காலம் வரைக்கும் எமக்காக உழைத்து நின்ற மாற்றின பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆதரவை நிறுத்தி, எமக்கான பிரதிநிதியென ராதிகாவின் மீது எம்மக்கள் முழு நம்பிக்கை வைத்து எடுத்த நிலைப்பாடுகளானது பின்னர் அதே மாற்றின பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை பார்த்து கேலி செய்யுமளவிற்கு எம்மை தலைகுனிய வைத்துள்ளார் ராதிகா. பிற்காலங்களில் பல்வேறு தேவைகளுக்கு அதே மாற்றின பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தலைகுனிந்து போக வேண்டியிருந்தது.
வெறுமனே தனது செல்வாக்கையும் பிரபலத்தையும் வளர்த்துக் கொள்வதற்காக களியாட்ட மேடைகளிலும், திறப்பு விழாக்கள், நூல் வெளியீடுகள், நடன அரங்கேற்றங்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் ராதிகா எமது மக்களின் போராட்ட விடயங்கள் மற்றும் கனடிய மைய நீரோட்ட அரசியல் தளத்தில் எமது மக்களின் விடிவிற்காக செய்யக்கூடிய, செய்யப்படவேண்டிய வேலைகள் எதனையும் செய்யாது, அவ்வாறான முன்னெடுப்புக்களை எம்முள் சிலர் செய்ய முற்பட்டு அதற்கான ஆதரவை அவரிடம் கோரும் பொழுது அவர் சொல்லும் விடயம் தான் தமிழர்களுக்கு மட்டும் எம்.பியல்ல மற்றைய சமூகங்களுக்கும்தான் ஆகவே தான் தமிழர்களுக்காக நெடுகப் பேசேலாதென்பதே. அவர் அப்படிக் குறிப்பிடுமளவிற்கு ஏதேனும் செய்தாராவென்றால் அவர் செய்தது நடன நிகழ்சிமேடைகளில் தோன்றியது மட்டுமே. அதுமட்டுமல்ல கேள்விகளை எழுப்பியவர்களுக்கு அவர் சொன்னதொரு இன்னொருவிடயமும் உண்டு.
அதாவது தனக்குத் தெரியும் தனது பாராளுமன்றக் காலத்தின் கடைசி வருடத்தில் எப்படி மீண்டும் தமிழ்மக்களை தன்;பக்கம் கொண்டுவருவதென்பதென்று. அதாவது தனது அடுத்த தேர்தலுக்காக. இக்கட்டத்தில்தான் தற்போது அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். அதாவது 2015ல் தேர்தலில் - அதற்கான அறிவிப்புக்களும் ஆயத்தங்களும் நடைபெறும் நிலையில் - குறிப்பாக இவரின் தேர்தல் தொகுதியில் இன்னொரு தமிழர் இன்னொரு கட்சியில் அடுத்த தேர்தலில் தான் நிற்பதாக அறிவித்ததும் தான் தற்பொழுது ராதிகா 'தமிழ் அக்கறை" சார்ந்து யாழ்ப்பாணம் வந்ததற்கான பின்புலமாகிறது. ராதிகா தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களோடு, அவர்களது அக்கறைகளோடு செயற்பட்டிருந்தால் கனடியத் தமிழ் மக்கள் தமது கடும் உழைப்பால் உருவாக்கிய ஒரேயொரு தமிழ் பிரதிநிதியை எதிர்த்து தேர்தலில் நிற்க இன்னொருவரை ஆதரித்திருக்க மாட்டார்கள்.
அது மட்டுமல்ல மிக அண்மையில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை, இலங்கை அரசின் தமிழர்கள் மீதான பாரிய மனித உரிமை மீறல்களை முன்வைத்து புறக்கணிப்புச் செய்த கனடிய அரசினது முடிவையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள செய்கின்ற பயணமுமே இதுவாகும்.
கனடிய அரசில் ஆளும் கட்சியாக பெரும்பான்மையுடன் இருப்பது பழமைவாதக் கட்சியாகும். அக்கட்சியில் இருந்துவரும் நம்மக்கள் பலரின் உழைப்பே கனடிய அரசாங்கத்தின் காமன்வெல்த மாநாட்டு புறக்கணிப்பின் முடிவில் பெரும் பங்காகும்;. உண்மையில் அம்முடிவிற்கும் ராதிகாவிற்கும் எந்தச் சம்பந்தமுமே இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தனது கட்சியலிருந்து(பிரதான எதிர்க் கட்சி)அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் தானகவோ அல்லது எமது சமூகத்தில் இயங்கிவரும் சமூக ஸ்தாபனங்களுடனோ இணைந்து முன்னெடுத்துச் செய்ததாக எதுவமே இல்லை. மற்றவர்களது கடும் உழைப்புக்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தன் கைக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் நடன மேடைகளில பேசுவதுதான் அவரது அரசியல்.
கனடிய அரசின் காமன்வெல்த மாநாட்டு புறக்கணிப்பு முடிவில் இவருக்கு இருந்த ஈடுபாட்டையும் பங்களிப்பையும் பார்ப்பதற்கு அவர் தமிழ்வின் இணயத் தளத்தளத்திற்கு கனடிய அரசின் புறக்கணிப்புச் தொடர்பாக வழங்கிய செவ்வியானது மிகத் தெளிவான சான்றாகும். கனடிய அரசின் இந்நிலைப்பாடானது தனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது என்று அச்செவ்வியில் அவர் சொல்லுகின்றார். ஏனெனில் கனடியப் பாரளுமன்றில் தன்னைத்தாண்டி தமிழர்கள் செல்லமுடியாதென இறுமாப்புக் கொண்டிருந்த ராதிகாவுக்கு உண்மையில் அது ஒரு ஆச்சரியமானதாகத்தான இருந்திருக்கும்.
அது மட்டுமல்லாமல், கனடிய அரசு எடுத்த இந்நிலையை விமர்சித்தும் பேசியிருந்தார். இந்த முடிவை எடுத்த கனடிய அரசு எப்படி கனடாவில இருக்கும் பிரச்சினைகளில் அக்கறை காட்டவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு எம்மக்களின் பிரச்சினையானது அவரைப் பொறுத்தளவில் தனது ஆதாயத்துக்காக அவர் பயன்படுத்தும் ஒன்று. அதைத்தாண்டி யாராவது காத்திரமாகச் செய்ய முற்படுவது அவருக்கு அவரது பிழைப்பில் மண்போடுவதுபோன்றது.
இவ்வாறான காத்திரமான ஒரு நிலைப்பாட்டை கனடிய பழமைவாதக் கட்சி எடுத்ததால் ராதிகா அடிக்கடி தானாகச் சொல்லிக்கொள்ளும் 'முதலாவது ஒரே ஒரு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதி" தான்தான் என்பதுவும், தமிழருக்காக கனடியப் பாராளுமன்றத்தில் ஏதாவது கதைப்பதென்றால் தனக்கூடாகத்தான்; உண்டு என்கின்ற அவரது எண்ணப்பாடும், பழமைவாதக் (தற்போதைய கனடிய அரசு)கட்சியில் செயற்பட்டுவரும் தமிழர்களின் கடும் உழைப்பால் கனடிய அரசினை எடுக்கப்பண்ணிய காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவு ராதிகாவை ஓடி முழிக்கப் பண்ணியது. இப்போதுதான் அவர் சொன்ன 'கடைசி வருடத்தில் தமிழ் மக்களை தன்பக்கம் கொண்டு வர தனக்குத் தெரியும்" (தமிழ் மக்களுக்கு காதில் பூ வைக்கவல்ல செருகும் நிகழ்ச்சி நிரல்)என்ற நிகழ்சிசி நிரலை தொடங்கியுள்ளார். இதன் முதற்படிதான் யாழ் வருகை.
இவ்வாறு இவர் செய்து வரும் அரசியல் கனடிய தமிழ் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், ஊரிலுள்ள மக்களுக்குத் தெரிய எவ்வித வாய்ப்பும் இல்லை. ராதிகா கனடிய பாரளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவருடைய கடும் உழைப்பே கனடிய அரசின் காத்திரமான இம்முடிவிற்கு காரணம் என்று மிகவும் பெதுப்படையாகவே நம்பக்கூடும், அதுமட்டுமல்ல அவ்வாறான தொனியில் கதைக்க ராதிகாவுக்கு சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. இதனை நாம் அனுமதிக்க முடியாது. இதனை வெளிக்கொண்டுவர வேண்டும்.
காமன்வெலத் மாநாடு சம்பந்தமானது ஒன்று மட்டும்தான், இதனைவிட பல்வேறு விடயங்களை நாம் குறிப்பிடலாம்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகத தெரிவாகி சில மாதங்களில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழர்கள் மீதான போர்க்குற்றம் தொடர்பான சில தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டி, அதற்கான ஆதரவை நாடியிருந்த போது ராதிகா அதற்கான எந்த உதவியையும் தராதபோது வேறு ஒரு தேர்தல் தொகுதியில் மாற்றின சமூக அங்கத்தவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் அத்தீர்மானங்கள் மாநாட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அது ஏகமனதாக நிறைவேறும் தறுவாயில் தனக்கு பெயர் சேர்க்கும் வகையில் கடைசியில் செயற்பட்டார்.
ராதிகாவின் பாராளுமன்ற தேர்தல் தொகுதியில் இருக்கக் கூடிய எம்மக்கள் இவருடன் இணைந்து செயற்பட்டால் சொல்லிப் பேசிச் செய்ய வைக்கலாம் என்ற நோக்கில் அத்தேர்தல் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு பொதுக்கூட்டத்திற்கு அக்கூட்டத்திற்கான அழைப்புக் கடிதங்கள் பெற்றிருந்த, கட்சி உறுப்பினர்களாகவிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சென்றிருந்தார்கள். தனது அலுவலக உறுப்பினர்களை வைத்து திட்டமிட்டு அவர்களது பெயர்கள் பட்டியலில் இல்லை என்று வெளியே விட்டார். இது மிகவும் அடாவடித்தனமாகவே நடந்தேறியது. இதன்போது நம்மக்கள் மேர்வின் சில்வாவை நினைவுகூர்ந்திருந்தார்கள்.
ஜெனீவாவில் இந்தவருடம் மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்கு ராதிகாவின் ஆதரவை எதிர்பார்த்த கனடிய தமிழ் மக்களிற்கு கிடைத்தது பெரிய ஏமாற்றமே. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தந்திருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள்- குறிப்பாக கனடாவில் இருந்து வந்திருந்த ஆளும் கட்சி எம்.பி, மற்றும் பிற கட்சி எம் பிக்கள் மத்தியில் எமக்கென்று கடும் உழைப்பில் உருவாக்கிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா வரவில்லை. அதற்கான காரணத்தை அவர் கூறியிருப்பது மிகவும் கபடத்தனமானது. கட்சி அனுமதி தரவில்லை என்பது. அதைவிட அதற்கான காரணம் என்பது அம்மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்மானங்களான தமிழ மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக அவருக்கு எந்த உடன்பாடும் இல்லை என்பதே உண்மையாகும். மாநாட்டிற்கு வராமல் விடடிருந்த போதிலும், அதன் பின்னர் அத்தீர்மானங்களுக்கான ஆதரவைக் கேட்டிருந்தும் இன்று வரை அதற்கான எந்தப் பதிலும் அளிக்காமலிருப்பது வெறுமனே தற்செயலல்ல. அது மிக வெளிப்படையான, மிகத்தெளிவான இலங்கை அரசுடன் ஒத்த நிலையே.
பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் மீண்டும் சிலரால் முன்வைத்து நகர்த்தப்பட்ட தமிழீழ மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு மற்றும் போக்குற்ற விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள போன்றவற்றிற்கு எந்தவித ஆதரவும் கொடுக்காமல் மாநாட்டு நிகழ்சிசி நிரலில் பின்னுக்குப்; போட்டு அதனை நிறைவேறாமலே செய்தார். அவ்வாறான தீர்மானங்கள் ஒரு கட்சியின் மாநாட்டில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு சில முறைமைகள் இருக்கின்றன. அதன் படி அது முதலில் கட்சியின் கீழ் மட்டமான தேர்தல் தொகுதிக்கான நிர்வாகக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் மாநாட்டு குழுவுக்கு கொண்டுசெல்லப்படும். இவ்வளவற்றையும் செய்வதற்கு ராதிகா தேவையில்லை. அதன் பின்னர் அதற்கான முன்னுரிமையைக் கொடுப்பதில் கட்சியின் மேல்மட்டத்தில் ஆதரவு தேடுவதில்தான் எம்.பியின் ஆதரவு தேவை. ஆனால் அதனை எதையும் செய்யாமல் கட்சி அங்கத்தவர்கள் முன் வைத்து கொண்டு வந்த தீர்மானங்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் போடப்பட்டதை தான் செய்ததாக, மிகவும் கீழ்த்தரமாக, மக்களை மந்தைகளாக நினைத்து செயற்பட்டார். அது மட்டுமல்ல நிகழ்ச்சி நிரலில் வந்ததை கட்சியின் 'பொலிசி புக்கில் தான் வரப்பண்ணியதாக தமில்நெற்றுக்கு செவ்வியும் கொடுத்திருந்தார்.
கடைசியில் எந்தத் தீர்மானங்களும் நிறைவேறாமல் இருக்கச் செய்தார். உண்மையில் இவர் இருக்கும் கட்சியான என்.டி.பி கட்சியின் அரசியல் தளமானது எம் போன்ற அடக்கப்படும் சமூகத்திற்கான அடிப்படை அரசியல் உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியாகும். அப்படியிருந்தும் அக்கட்சிக்குள் இருந்து வரக்கூடிய காத்திரமான நிலைப்பாடுகளை தடுத்து நிற்கும் இவர் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி எடுக்கும் எம்மக்கள் சார்பான காத்திரமான நிலைப்பாட்டை ஆச்சிரியமாகப் பார்ப்பது ஒன்றும் புரியமுடியாததில்லை. அடிப்படையில் இவருக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடுதான் உள்ளது என்பது ஒன்றும் நிறுவவேண்டியதில்லை. இல்லையெனின் கனடிய அரசின் நிலைப்பாடுகளை வன்மையாகக கண்டிக்கும் மற்றும் கனடிய அரசின் வேறு பாரளுமன்ற உறுப்பினர்களை திருப்பி அனுப்பும் இலங்கை அரசு எவ்வாறு இவரை மிக இலகுவில் அனுமததித்தது. அதுவும் மிக அண்மையில் தமிழ் மக்கள சார்பாக பேசிவரும் அமெரிக்கரொருவர் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில் அதே சமகாலத்தில் இவரை மிக இலகுவாக அனுமதித்தது என்பது என்ன??
மற்றும், இதே பண்பைக் கொண்டவர் ஊரில் அதுவும் குறிப்பாக நொந்துபோயிருக்கும் தமிழ்பெண்களை தான் பெண் என்பதை கருவியாக வைத்து ஏமாற்றுக் கதைகள் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது வெறுமனே தனது ஊடக விளம்பரத்திற்கானது மட்டுமாகத்தனிருக்கும். அந்த விளம்பரங்கள் அவரின் கனடிய தேர்தல் நோக்கத்திற்கானது மட்டும்தான் என்பதே உண்மை. இவ்வாறான ஒருவர் மிக இலகுவாக நொந்து, பிய்ந்து போயிருக்கும் எம்மக்களை பகடைக் காய்களாக பாவிப்பதை அனுமதிக்க முடியாது.
ஆகவே அடிப்படையில் இவரிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவைதான்:
கனடாவில் இவரது தேர்தல் வெற்றியில் தமிழ் மக்களாக முன்வந்து இவரை கூட்டிக் கொண்டுவந்து கட்சியில் சேர்த்ததில் இருந்து வெல்ல வைத்தது வரை தமிழ் மக்களின் பங்களிப்பை இவர் எவ்வாறு பார்க்கிறார். ஏனெனில் இதனை கேட்பதனூடாகவே தமிழ் மக்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற இவரிடம் தமிழ் மக்கள் கொடுத்திருந்த மான்டேற் பற்றி கேள்வி கேட்க முடியும்.
மற்றயது, போர்குற்றம் தொடர்பான இவரது நிலைப்பாடு. இனப்படுகொலை தொடர்பான இவரது நிலைப்பாடாகும். சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான இவருடைய நிலைப்பாடும் இவரிடம் கேட்கப்படவேண்டிய மிக முக்கிய கேள்வியாகும்.
கனடாவில் இருக்கக் கூடிய கனடியத் தமிழ் மக்களும் மற்றும் ஸ்தாபனங்களும் தமிழர் தீர்வு மற்றும் போர்குகுற்ற விடயங்களில் தெளிவான நிலைப்பாடு கொண்டிருக்கையில் இவரின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்படாதது கேள்விக்குரிய மிக முக்கிய புள்ளியாகும்.
இதில் மிகக் கவனமான கையாள வேண்டிய விடயம் என்னவெனில், நேரடியாக இக்கேள்விகளுக்கான பதிலை சொல்லவைப்பதாகும். மிகவும் சளாப்பும் வல்லமை கொண்டவர். தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் ஒரு கட்சியல் இருப்பவர் ஆகவே தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்ல முடியாது போன்ற காரணங்கள் இவர் சொல்லி வரும் நொண்டிக் குற்றச் சாட்டுகளாகும். இவ்வளவு நெருக்கடிக்குள்ளும் தமது நிலைப்பாடுகளை இலங்கைப் பாராளுமன்றில் துணிவாக முன்வைத்து போராடிவரும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில், மிகவும் சாதகமான கனடாபோன்ற சூழலில், அதுவும் எம்மைப்போன்ற ஒடுக்கப்படும் சமூகங்களுக்கான அரசியல் உரிமைகளை அதன் அடிப்படையில்-சுநிர்ணய உரிமை, பேசக்கூடிய, செயற்படக்கூடிய கட்சிக்குள் இருக்கும் ராதிகா பேசாமல், செயற்படாமல் இருந்துவருவது (அதுவும் பழமைவாதக் கட்சியான இன்றைய ஆளும் கட்சி தமிழர்கள் சார்பாக காத்திரமான நிலைப்பாட்டை - காமன்வெலத் புறக்கணிப்பு எடுத்துள்ள இன்றைய சூழலில்) ஒன்றும் தந்திரோபாய ரீதியில் அல்ல மாறாக அவரின் அரசியல் நிலைப்பாடு தொடர்பானதாகும்.
அவர் என்றைக்குமே போர்க்குற்றம் பற்றியோ இனப்படுகொலை பற்றியோ, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு பற்றியோ தனது நிலைபாட்டை தெளிவபடுத்தியதில்லை. அப்படிக் கேள்விகள் வரும்போது அவர் கூறுவது ஐ.நா தனது அறிக்கiயில் குறிப்பிட்டள்ளது அல்லது யாரேனும் எடுத்துள்ள நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவுது மட்டும்தான். அவர் தன்து நிலைப்பாடு என்று எதனையும் தெளிவாகச் சொல்லியதில்லை. அதனைச் மிகச் சாதுரியாமக தள்ளிவிட்டுப் போகும் ராதிகா இலங்கை வந்துள்ளமையானது பெரும் கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

0 Responses to செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல் தேர்தல் ஆதாயம் தேட யாழ் வந்த ராதிகா!!