வெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் 2014 ஆங்கிலப் புத்தாண்டு மூலம் நக்ஷத்திரத்தில் பிறக்கிறது.
நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று
அந்நிய செலாவனி அதிகமாகும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப
நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். தவறு செய்தவர்கள்
சட்டப்படி தண்டிக்கப்படுவர். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை
கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். பாலைவனத்தில்
உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம்
நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள்
பற்றாக்குறையாக இருக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும்.
தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து வந்து செல்வதும், அதனை அரசு
அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான
உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக
இருக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி
நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும்.
அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
· கேது மேஷ ராசியிலும், குரு மிதுன ராசியில் வக்ரமாகவும், சனி - ராகு துலாமிலும் இருக்கிறார்கள்.
· 06-03-2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்க தொடங்குகிறார்.
· சனி 03-03-2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார்.
· குருபகவான் 18-06-2014 அன்று கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
· 20-06-2014 அன்று ராகு பகவான் கன்னிக்கும், கேது மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
· சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
இனி பன்னிரு ராசிகளுக்குமான பொதுப் பலன்களை காண இங்கே அழுத்தவும்.
4தமிழ்மீடியா
பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள்
சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும்,
இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும்
நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று
இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும். வரப்போகும் 2014ம் வருடம் கேதுவின்
நக்ஷத்திரமான மூலம் நக்ஷத்திரத்தில் பிறப்பதால் மண்ணில் வாழும்
மக்களுக்கெல்லாம் கடவுளின் கிருபையால் நன்மைகள் பல பெருகும்.
நிகழும் மங்களகரமான விஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 17ம் தேதி(01-01-2014) புதன்கிழமையும், அமாவாசையும், மூலம் நக்ஷத்ரமும், விருத்தி நாம யோகமும் சதுஷ்பாதம் கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று முன்தினம் செவ்வாய் அஸ்தமனத்திற்குப் பின் 15.18 நாழிகை நடுஇரவு 12 மணிக்கு தனுசு ராசி, ரிஷபம் நவாம்சத்தில் சந்திரன் நிற்க கன்னியா லக்னத்தில் மத்திய திரேக்காணம் கொண்டு ஆங்கில வருட புத்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 9 கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷத்தை அதிகமாக அள்ளித்தரும் வகையில் இருப்பது சிறப்பம்சமாகும். ஆண்டின் தொடக்கத்தில் பூர்வபுண்ணியாதிபதி சனி உச்சமாகவும், லக்னாதிபதி சுகஸ்தானத்திலும், தன பாக்கியாதிபதி அவரது இடத்திற்கு சுகஸ்தானத்திலும், குரு அவருடைய ஸ்தானங்களுக்கு நல்ல ஸ்தானங்களிலும் இருக்கிறார்கள். மேலும் குரு தனஸ்தானத்தையும், தொழிற்ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்க்கிறார்.
ஞான வாழ்விற்கு உதவி காட்டும் எண்: 7. இந்த ஆண்டு கேது ஆதிக்கத்தில் அமைவதோடு, லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் கேது அமர, கேதுவின் நக்ஷ்திரத்தில் ஆண்டு மலர்கிறது. 1-1-2014 என்பதன் கூட்டு எண் 9, செவ்வாய் ஆதிக்கம். செவ்வாய் லக்னத்திற்கு தைரிய அஷ்டமாதிபதி. ராசிக்கு பூர்வபுண்ணிய மோக்ஷ விரையாதிபதி. எல்லா எண்களையும் விட ஏழு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் அதிகம். ஞானம் சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைய நடக்கும். போர்கள் அதிகரிக்கும். மக்கள் நாடு விட்டு நாடு பெயர்ச்சியாவார்கள். பொருளாதார நிலையில் தன்னிறைவு கிடைக்கும்.
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். புதன் வீட்டில் குரு இருப்பதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் மிக அசுர வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். புதன்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும். இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைந்தும் குரு பார்வையும் ஏற்படுவதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும். நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும். தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும். உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம். உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்
ஜெகத் உலக ஜாதக விஷயம்:
புத்தாண்டு ஜென்ம நக்ஷத்ரம் - மூலம் 3ம் பாதம், தனுசு ராசி. ஜென்ம லக்னம் - கன்னி. லக்ன பாதசாரம் – ஹஸ்தம்; வர்கோத்திர யோகம், குரு சந்திர யோகம், கெஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம் ஆகியன. தேவதை - அக்னி. பஞ்சபக்ஷி - வல்லூறு. திசை இருப்பு: கேது - 03 வருஷம் - 08 மாதம் - 19 நாட்கள் – கேது திசை – ராகு புத்தி நடக்கிறது.
நவநாயகர் பாதசாரம்:
லக்னம் – ஹஸ்தம் 2
சூரியன் - பூராடம் - 1
சந்திரன் - மூலம் - 3
செவ்வாய் - ஹஸ்தம் - 1
புதன் - பூராடம் - 3
குரு - புனர்பூசம் - 2
சுக்கிரன் - உத்திராடம் - 3
சனி - விசாகம் - 2
ராகு - ஸ்வாதி - 1
கேது - அசுபதி - 3
பொது பலன்கள்:
பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமைஎழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கடன் வாங்குவதும் மேலுள்ளவர்கள் கொடுத்து அதற்கேற்றார் போல் வட்டி வசூலித்தலும் நடைபெறும். இடி மின்னல் அதிகம்.

சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும். இயற்கையின் சீற்றத்தால்
சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு
நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில
அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம்
மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.
புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில்
சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம்
கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும்
சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய
வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.
விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள்
பிரச்சனைகள் தீரும். அரபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும்.
ராக்ஷஸ அலைகள் உண்டாகும்.
மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்படும். இந்தோனேஷியா,
ஜப்பான், இலங்கை, அந்தமான், ஒடிஸா, ஆந்திரா போன்ற ஊர்களுக்கு கடுமையான
புயல் பாதிப்புகள் உண்டாகும். ராணுவம் தங்களது வியூகங்களை அடிக்கடி
மாற்றும். அந்திய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு மறைமுக இன்னல்கள்
வரும். வரும் ஆண்டில் வாகனம், கப்பல், விமானம், ரயில் போன்றவைகளில்
விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. குண்டுவெடிப்பு, அக்னி
அபாயங்கள் ஏற்படலாம். இந்தியாவில் ஜாதி, மதம் வெறிச் சண்டைகள், கலகங்கள்
ஏற்படலாம். தீவிரவாதங்களை ஒடுக்க, கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை
மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும். அரசுகளுக்குள் குழப்பங்கள்
ஏற்பட்டு மறையும். தமிழகம் எதிர்பார்த்தபடி இவ்வாண்டில் மழை பொழியும்.
முக்கியமான வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மறையும். பசுமையான
வனப்பகுதிகளாக மாறும். ராகு கேதுவால் நாட்டில் பக்தி பெருக்கமும்
ஆலயங்களில் கூட்டம் அதிகரிப்பும் காணப்படும். ஆலய நிர்வாகம் வருமானப்
பெருக்கத்திற்கான வழிமுறைகளை கொண்டு வரலாம். தியானம், யோகா, வேள்விகளுக்கு
முக்கியத்துவம் அதிகரிக்கும்.
உணவு தானியங்கள், காய், கனிகளின் விலை உயர்வு
கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். மண்ணென்ணைய், டீசல், பெட்ரோல், கேஸ்,
எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்படும். மக்களுக்கு
இதற்கான தேவை அதிகரிக்கும். தங்கம் வெள்ளி விலை ஏற்றமடையும். விவசாயம்
செழிக்கும். மகசூல் அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வில் பிரகாசம்
ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு சத்தியசோதனையாக அமையும்.
தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவும், சலுகைத்
திட்டத்தால் பயன்களும் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதுவருடம்
சம்பாத்தியம், புகழ், பெருமை ஏற்படும். புதுமுகங்களின் வரவு அதிகமாகும்.
கலைத்துறையினர் சிலருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களை விட
மாணவிகளின் தேர்ச்சி அதிகமாகவும், சாதனைகள் புரியவும் செய்வார்கள்.
அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
· கேது மேஷ ராசியிலும், குரு மிதுன ராசியில் வக்ரமாகவும், சனி - ராகு துலாமிலும் இருக்கிறார்கள்.
· 06-03-2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்க தொடங்குகிறார்.
· சனி 03-03-2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார்.
· குருபகவான் 18-06-2014 அன்று கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
· 20-06-2014 அன்று ராகு பகவான் கன்னிக்கும், கேது மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
· சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
இனி பன்னிரு ராசிகளுக்குமான பொதுப் பலன்களை காண இங்கே அழுத்தவும்.
4தமிழ்மீடியா
0 Responses to 2014ம் வருடம் பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்