Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள ரிஆர்சி என்றழைக்கப்படும் உண்மையும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தொடர்பான மாநாட்டிற்கு கூட்டமைப்பு செல்வது தமிழ் மக்களிற்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்குமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் பேசிய அவர் தென்னாபிரிக்காவினில் இரு தரப்புக்களும் பேசி தீர்வு திட்டமொன்று எட்டப்பட்டிருந்தது.அதன் பின்னர் இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு வழங்கும் நடைமுறையினை அமுல்படுத்தியிருந்தன .ஆனால் இங்கோ இன அழிப்பு தொடர்கின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும்; நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழூவின் பொறிமுறை சாத்தியமற்றது எனத்தெரிவித்த அவர் இங்கு இடம்பெற்று வருகின்ற இன அழிப்பிற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையே அவசியமென்பதே தமிழ்த்தேசிய மக்கள் முண்னணியின் நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

இன அழிப்பிற்கு உண்மைக்கும்; நல்லினக்கத்திற்மான பொறிமுறை பொருத்தப்படாற்றதென நிராகரித்துள்ள கNஐந்திரகுமார் பொன்னம்பலம் ;இதனை இங்குள்ள தமிழ்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமாயின் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…

இங்கு போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இங்கு ஐனநாயகமும் இல்லாத நிலையில் அராஐக இராணுவ ஆட்சியே நடக்கின்றது.

இந்நிலையில் இங்கு இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு பொறிமுறையை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் தென்னாபிரிக்கா அரசின் ஆதரவுடன் மேற்கொளப்பட்டு வருகின்றது.இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி கூட இதை பற்றி பிரஸ்தாபித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இங்கு இடம்பெற்றது இன அழிப்பு என்றே நாம் தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவ்வாறில்லை என தெரிவித்து வருகின்றனர்.ஜெர்மனியினில் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்ட தீர்ப்பாயமே கூறவிட்டது இலங்கையினில் நடந்தது இனப்படுகொலையேயென.ஆனால் கம்பெனி விடயங்கள் பற்றி மட்டும் தெரிந்த கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்பி சொல்கின்றார் நடந்தது இனப்படுகொலையில்லெயென.இவ்வாறு இங்கு இன அழிப்பு நடைபெறவில்லை என அரசிற்கு வக்காலத்து வாங்குகின்ற தரப்பினர்கள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்பதை மக்கள் புரிந்து கொள்ள கேட்டுக்கொண்ட அவர் இவ்வாறு செயற்படுவது யாருடைய நிகழ்ச்சி நிரலில்; எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆகவே இந்த விடயத்pல் மக்கள் தெளிவானதொரு நிலையை மண்ணிலும் புலத்திலுமுள்ளவர்கள் எடுக்க வேண்டும். அதாவது வெற்றுக் கோசங்களுக்கு எடுபடாமல் சிறந்ததொரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் கNஐந்திரகுமார் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது கட்சியன் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் மற்றுமு; கட்சியின் சர்வதேச விவகாரங்களிற்கான  தலைவர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to உண்மையும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு தொடர்பான மாநாட்டிற்கு கூட்டமைப்பு செல்வது மிகப்பெரிய துரோகம் - கஜேந்திரகுமார்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com