Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள தெற்கு மற்றும் மேற்கு மாகாண சபைத் தேர்தல்களின் போது கட்சியின் அடிமட்டத்தில் இருந்தே அரசியல் அனுபவத்துடன்

வரக்கூடியவர்களுக்கு வேட்பாளர்களாக இடமளியாமல் முக்கிய கட்சிகள்  இரண்டும் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி), சினிமா நடிகைகள் உள்ளிட்ட கவர்ச்சி அடையாளம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு (கஃபே) குற்றஞ்சாட்டியுள்ளது.

கவர்ச்சி அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நாட்டின் ஜனநாயகத்துக்கும், இறைமைக்கும் எதிர்காலத்தில் பிரச்சினையை உருவாக்கலாம் என்று அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அஹ்மட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளிலும், அதன் தொழிற்சங்கங்களிலும் அடிமட்டத்தில் இருந்து வரக்கூடிய அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு கவர்ச்சி அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் செயற்பாட்டினால் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அரசியல் அனுபவம் மிக்கவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்ற கருத்தை தாம் ஏற்பதாகக் கூறும் சுயாதீன பத்திரிகையாளரான தேவகௌரி, இருந்தபோதிலும் பெண்களுக்கு கவர்ச்சி அடையாளம் வழங்கப்படுவதை நிராகரித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை ஆண்களும் கூட அவர்களது அரசியல் அனுபவத்தை, அறிவை அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்களிடம் இருக்ககூடிய பணம், பிரபலம், சண்டித்தனம் செய்யக்கூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசியலில் உள் ஈர்க்கப்படுவதாகவும் தேவகௌரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் தற்போது பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், அரசியல் அனுபவமற்ற சினிமா நடிகைகளை கொண்டுவருவதன் மூலம் பெண்களுக்கான சிறிய வாய்ப்புக் கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாகவே தாம் கவர்ச்சி அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் என்று வலியுறுத்துவதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு (கஃபே) தெரிவித்துள்ளது.

0 Responses to தேர்தல்களில் கவர்ச்சி அடையாளங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிருங்கள்: கஃபே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com