Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேற்கு வங்கத்தில் 20 வயது பெண் ஒருவர் 12 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு உள்ளார்.

இந்த சம்பவம்  தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தில் உள்ள  ஒரு குக்கிராமத்தில் மலை சாதிப் பெண் ஒருவர், வேறு சாதி ஆணை காதலித்ததாக பஞ்சாயத்தார் முன்னிலையில் நிறுத்தப் பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டதாகவும், ஆனால் அந்த பெண்ணின் பெற்றோருக்கு அபராதத்தை செலுத்த வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதை அடுத்து இரவு நேரத்தில் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து உறுப்பினர்கள் 12 பேரை, அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய ஏவியதாகத் தெரிய வருகிறது. 12 பேரின் வன் கொடுமைக்குப் பிறகு, மயங்கிய நிலையில் அந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது ஊடங்கங்கள் மற்றும் செய்தித் தாள்களில் பரபரப்பு செய்தியான காரணத்தால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக பதிவு செய்து, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மேற்குவங்கத்தில் சம்பவம் நடைபெற்ற ஊரின் மாவட்ட நீதிபதி, சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, ஒரு வாரத்துக்குள் இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.

இதே போன்று மேற்கு வங்க அரசும் ஒரு வாரத்துக்குள் இந்த சம்பவம் தொடர்பான விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

0 Responses to பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்:மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com