பௌத்த மகா சங்கத்தினை விமர்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புத்த சாசன அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரியும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு எதிராக கொழும்பில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
சிங்கள ரவய என்கிற பௌத்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த பேரணியில் பௌத்த பிக்குகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு பிரதமருக்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.
அத்தோடு, கொழும்பு 07, பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன நுழைவதையும் தடுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டனர். இதனையடுத்து, பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததுடன், தற்காலிகமாக குறித்த வீதியையும் மூடியுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சார்பாக சுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கும் கடிதமொன்றை பிரதமர் அலுவலகம் வழங்கியமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரதமரின் மகன் தொடர்புகளை பேணியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையிலேயே, பிரதமர் பௌத்த மகா சங்கத்துக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளதாக சிங்கள ரவய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

0 Responses to பிரதமர் டி.எம்.ஜயரட்னவை புத்த சாசன அமைச்சு பதவியிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டம்