Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலம் காலமாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமிழீழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது உயிரினும் மேலான தாயக மண்ணை மீட்டெடுப்பதற்காகவும் தணியாத தமிழீழத் தாகத்துடன் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.

ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரி, பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன், யேர்மனியை சேர்ந்த செந்தில் குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தி ஆனந்தன்  ஆகியோரின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களும் ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள். ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் உறவுகளை உற்சாகப்படுத்தும் முகமாக நெதர்லாண்ட் நாட்டைச் சேர்ந்த தமிழ் இளையோர்களும் நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்  மேலும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

மிகவும் கடுமையான காலநிலைக்கு மத்தியிலும் ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணம் மிகவும் உற்சாகத்துடன் இடம்பெறுகின்றது. ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் உறவுகளை 0031684999900 என்ற அலைபேசி இல. தொடர்பு கொண்டு உங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

மேலதிக தகவல் அறியத்தரப்படும்.

0 Responses to தணியா தமிழீழ தாகத்துடன் ஐ.நா. நோக்கி நீதிக்கான நடை பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com