சென்னையில், தழல் ஈகி முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக்குழு சார்பில், முத்துக்குமார் உள்ளிட்ட 26 ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 26 அடி நினைவுத் தூண் எழுப்பப்பட்டிருந்தது. இயக்குநர் த.புகழேந்தி, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்டோரும், மாணவர்களும் இணைந்து இவ் ஏற்பாட்டைச் செய்திருந்தனர். அத்தூணுக்கு பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையிலான தோழர்கள், இந்திய சிங்கள கூட்டுச் சதியை அம்பலப்படுத்திய ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு முத்துக்குமார் நினைவுத் தூணை வந்தடைந்தனர். அங்கு தோழர் பெ.மணியரசன் ஈகியர் தூணுக்கு மலர் தூவி வீரவணக்கம் செய்தார்.
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Responses to தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தழல் ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம்