Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்து தரப்புக்களதும் வாயை மூடவைக்க இலங்கை அரசு முயற்சிகளை வேகமாக முன்னெடுத்து வருகின்றது. அவ்வகையில் படைக்குறைப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்திருந்த அரசு தற்போது காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களையும் முடக்க முற்பட்டுள்ளது.

அவ்வகையில் விசாரணைக்குழுவொன்;றை அமைத்து நடனமொன்றை அரங்கேற்றி வரும் மஹிந்த அரசு மறுபுறத்தே காணாமல் போனவர்களை உயிரிழந்தவர்களாக கருதி மரணச்சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இன்றைய தினம் வன்னியிலிருந்து பெருமளவிலான காணாமல் போனோர் குடும்பங்களை சேர்ந்தவர்களை புதிதாக முளைத்துள்ள அமைப்பொன்று கொழும்பிற்கு அழைத்து சென்றுள்ளது.

குறிப்பாக காணாமல் போனோரது குடும்பங்களை உளவியல் ரீதியாக சிதற வைத்து காணாமல் போனவர்கள்  உயிரிழந்து விட்டதாக ஏற்று மரணச்சான்றிதழ்கள் வழங்கவே முழு அளவினில் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகின்றது. குறித்த அமைப்பு பற்றி தாம் முன்பின் அறிந்திருக்கவில்லையென கூறும் அவர்களிற்காக குரல் எழுப்பி வரும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் மஹிந்தவின் ஆணைக்குழு யாழ்ப்பாணத்திலும் சாட்சியங்களை பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணத்தில் பெப்ரவரி 14 முதல் 17 வரை, காணாமல் போனவர்களின் உறவினர்கள் தகவல்கள், சாட்சியங்களை வழங்கமுடியுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலும் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இரு மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முதலாவது அறிக்கை தயாரிக்கப்படுமென காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

0 Responses to ஜெனீவாவிற்காக வெள்ளையடிக்கும் மஹிந்த அரசு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com