Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கூறியுள்ளது. இது குறித்து அனைத்துலக மன்னிப்புச்சபையின் தலை நிர்வாகி ஜி.ஆனந்தபத்மநாதன் தெரிவிக்கையில், வடமாகாணசபையில் கடந்த 27ஆம் திகதி போர்க்குற்ற விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்றியதையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை அனைத்துலக விசாரணை வேண்டும் என வலியுறுத்தும்போது, உள்நாட்டு விசாரணையில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

வடமாகாணசபையில் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்தைக் கவனத்திலெடுத்து வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் சிறீலங்காப் படையினரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கு இணங்குமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to அனைத்துலக விசாரணைக்கு இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும் - மன்னிப்புச்சபை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com