ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்து கொள்வதற்கான அனுமதியை வடக்கு மாகாண வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகிளன் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவுடன், மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனந்தி சசிதரனால் இன்று திங்கட்கிழமை வடக்கு மாகாண சபை அமர்வுகளின் போது வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மோதல்களினால் உறவினர்களை இழந்துள்ள அனந்தி சசிதரன் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு தகுதியானவர். எனவே, அவருக்கான அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றார். அதனை கருத்தில் கொண்ட அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுமதி அளித்துள்ளார்.
இதனிடையே, இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வுகளின் போது “மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச நாடுகளினால் முன்னெடுக்கப்பட வேண்டும்“ என்று கோரும் தீர்மானமொன்று அனந்தி சசிதரனால் கொண்டு வரப்பட்டது. அதுவும், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா.மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனந்திக்கு அனுமதி