Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாண சபைக்கு அனுசரணையாக அதன் நிர்வாக மட்டத்தில் பணியாற்றும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் செயலாளர்களை இன்று வியாழக்கிழமை சந்தித்து விளக்கமளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஏனைய மாகாண சபைகளில் எவ்வாறான நிர்வாகம் நடைபெறுகின்றது என்று தெரியாது. ஆனால், எமது தலைமையில் இருக்கின்ற மாகாண சபையில் மக்களின் நம்பிக்கையின் பொறுப்பாளர்களாகவும், காவலர்களாகவும் இருப்பதற்கு முயல வேண்டும். எமது மக்கள் தொடர்ச்சியாக பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர். அரசியல் பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனை மீன கட்டியெழுப்புதவற்கு முயற்சிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மோதல்களின் பின் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, வியாபாரம், கூட்டுறவு, காணி உள்ளிட்ட விடயங்களில் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. சட்டம் எமக்குப் பல கடப்பாடுகளை விதித்து எமது அதிகாரங்களையும் முடக்கியுள்ளது. ஆனால், அதற்கூடாகச் சுழியோடி மக்கள் நலன்களை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

0 Responses to மக்களின் எதிர்பார்ப்பினை நிவர்த்திக்க நிர்வாகிகள் துணை நிற்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com