Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்தவின் மகனது விருப்பத்திற்கு நடிகை அசின் தற்போது இலங்கைப் படையினரதும் விருப்பத்திற்குரியவராகியிருக்கிறார். அவ்வகையினில் இராணுவத்தின் ஏற்பாட்டில் ஆனையிறவில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் மஹிந்த குடும்பத்தின் நன்மதிப்பைப்பெற்ற தென்னிந்திய நடிகையான அசினின் புகைப்படங்களை இராணுவத்தினர் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்டுத்தியுள்ளனர்; குறிப்பாக நுழைவாயிலின் இருபுறங்களும் தென்னிந்திய நடிகையின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. இதேபோல் மேடையையும் அசின் புகைப்படங்கள் அலங்கரித்திருந்தன.

கடந்த காலங்களில் மஹிந்தவின் அழைப்பை ஏற்று அவரின் குடும்பத்தின் விருந்தினராக இலங்கைக்கு வந்திருந்த அசின், ஆளும்கட்சியின் அரசியல்வாதிகளுடன் உறுவுகளை வைத்துக்கொண்டதாகக் கிசுகிசு வெளியாகியிருந்தது. இதனால் அசினுக்கு தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் வாய்ப்புக்கள் குறைவடைந்திருந்துள்ள நிலையில் தற்பொழுது அவர் இராணுவத்தின் நிகழ்வுகளில் காட்சிப்பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நடிகை அசின் இப்பொழுது படையினருக்கும் சொந்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com