Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.போதனா வைத்தியசாலையின் மற்றொரு தொழிற்சங்கப் பணியாளர்கள் இன்று காலை முதல் அடையாளப் போராட்டமொன்றினில் குதித்துள்ளனர். இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் சுகாதார சிற்றூழியர்களே இன்று காலை சுமார் ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

யாழ் போதனா வைத்தியசலை  சுகாதார சிற்றூழியர்களான இவர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரையான ஜந்து மணிநேர அடையாளப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமது ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டனர்;. தமக்கான கொடுப்பனவுகள் லீவுகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளினில் பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சி ,முறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை தவிர்த்தல் என்பற்றினை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் குறித்த அமைப்பின் யாழ்.பிராந்திய செயலாளர். ஜெயரூபன் கருத்து தெரிவிக்கையில், தாம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே 5மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும் இந்த பணிப்புறக்கணிப்பு இன்று 12மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆயினும் இந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையினில் தொடரும் இத்தகைய போராட்டங்களினால் அன்றாட செயற்பாடுகள் மந்த கதியினை அடைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com