Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

பாலச்சந்திரன் கதையை “புலிப்பார்வை” என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள்.

பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார்.

100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி பாலச்சந்திரன் போன்ற தோற்றம் கொண்ட சிறுவனை கண்டுபிடித்து நடிக்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக் கட்டப் போரில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படம் வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி பின்னர் பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டு பிஸ்கட் உண்ணும் காட்சி அடங்கிய ஆதாரத்துடன் மற்றுமொரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது.

இந்த ஆவணப்படத்தால் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டது. சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற கோஷம் மிக வலுவாக எழுப்பப்பட்டது.

ஆனாலும் குறித்த ஆவணப்படத்தை இலங்கை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாலச்சந்திரன் கதை “புலிப்பார்வை” என்ற பெயரில் திரைப்படமாக வருகிறது (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com