Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை காரணமாக வைத்து, காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் உத்தேசித்துள்ளது.

இந்திய ஊடகங்களின் தகவல்படி, இது சம்பந்தமாக காங்கிரஸ்கட்சியுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த வருடம் இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தியே தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.

எனினும் இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலின் போது காங்கிரஸிற்கு ஆறுதல் அளிக்க வேண்டுமாக இருந்தால், இலங்கை பிரேரணைக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்ற ரீதியில் தமிழகத்தில் இருந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி பாரிய பின்னடைவினை சந்தித்துள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேநேரம், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படுகின்ற நிலையிலேயே இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸில் இருந்து விலகும் போது இனி காங்கிரஸ{டன் கூட்டில்லை என்று தி.மு.க அறிவித்திருந்தார்.

எனவே உடனடியாக இந்த அறிவிப்பை மறுத்து காங்கிரஸ{டன் இணைய முடியாத நிலையிலேயே, தி.மு.க மீண்டும் அமெரிக்க பிரேரணைக்கான இந்தியாவின் ஆதரவு என்ற நாடகத்தை அரங்கேற்றுவதாக கருதப்படுகிறது.

எனினும் இந்த விடயத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் மிக முக்கிய பங்கினை வகிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி ஊடகங்களின் விமர்சனங்களின் படி, இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாரதீயே ஜனதா கட்சியின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, ஜெயலலிதா ஜெயராம் காணப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சி அதனோடு கூட்டணி அமைப்பதை பெரும்பாலும் விரும்பாது என்றும் கூறப்படுகிறது.

காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிக் கூட இல்லை.

கடந்த மாநில தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருந்தது.

இந்த நிலையில் தமது பலத்தை அதிகரித்துக் கொள்ளது, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக உள்ள விஜயகாந்த் தலைமையிலான முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமாறு காங்கிரஸ் கட்சி தி.மு.காவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்திக்கு தி.மு.கவின் பிரதி தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆர்வத்துடன் உளளார்.

அத்துடன் முற்போற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த மாநிலங்கள் அவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டு பின்னர், வெளியேற்றப்பட்டிருந்தது.

எனவே அதன் தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் இல்லை என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்தையும், ஏனைய தலித் கட்சிகளையும் திரட்டி கூட்டணி ஒன்றை உருவாக்கி, அதன் ஊடாக காங்கிரஸ{டன் மீண்டும் இணைந்துக் கொள்ளும் திட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது.

இதற்கு துருப்புச் சீட்டாக இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை பயன்படுத்திக் கொள்ளவுள்ளது.

இரண்டு விடயங்களும் சமகாலத்தில் இடம்பெறுகின்றமை, தி.மு.கவுக்கு கிடைத்துள்ள சாதகநிலையாகும்.

0 Responses to கலைஞர் எழுதுகிறார் திரைக்கதை! மீண்டும் காங்கிரசுடன் கூட்டணியாம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com