ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்னதாக ராஜதந்திரவட்டாரங்கள்
பலவும் வட- கிழக்கிற்கு தொடர்ந்தும் படையெடுத்து வந்தவண்ணமேயுள்ளன.
அவ்வகையில் யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த கனேடிய வெளிவிவகார
அமைச்சின் அதிகாரிகள், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.
கனேடிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஜே.எஸ்.நிகார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இரு நாள் பயணமாக நேற்றுக் காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். முதலில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினை சந்தித்த அவர்கள் நண்பகலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை இவர்கள் சந்தித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலேயே இவர்கள் அதிகளவு கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் யாழ். நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை திரட்டுவதிலேயே முனைப்பு காட்டியிருந்தனர். ஏற்கனவே தமிழ் கனேடிய நாடாளுமன்ழு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கனேடிய உயர்மட்ட அதிகாரிகள் குழு யாழ்.விஜயம்!!