கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார். ’’தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது’’ என்றும் ’’ இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது.’’ இவரது கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சர்வதேச சமூகத்திடம் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தினையும், தமிழ்த் தேசத்தினை இறைமைக்கான அங்கீகாரத்தினையும் வலியுறுத்த வேண்டும்.
அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும்போது புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படும். அதன்போது தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் சமம் என்ற அடிப்படையில் இரண்டு தேசங்களும் இணைந்து அந்த புதிய அரசியல் யாப்பை எழுத வேண்டும்.
அந்த அரசியல் யாப்பில் ஒரு தடவை இலங்கையில் சனாதிபதி சிங்கள தேசத்தில் இருந்தும் இன்னொரு தடவை தமிழ்த் தேசத்தில் இருந்தும் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்று எழுதப்பட்டல் வேண்டும்.
அவ்வாறான அரசியல் யாப்பு ஒன்றின் பிரகாரம் ஒரு நாட்டிற்குள் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் இலங்கையில் தமிழ்த் தேசத்திலிருக்கும் தமிழர்களும் இலங்கையை ஆழ்வதற்கான வாய்ப்புக்கள் 100 வீதம் உண்டு.
மாறாக பேரினவாதத்தின் மேலாண்மையை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இதன் சாத்தியத் தன்மை பற்றி சிந்திக்க முடியாது.
தற்போதுள்ள ஒற்றையாட்சி அரசிமைப்பின் கீழான மாகாண சபையை ஏற்றுக்கொண்டாலோ அல்லது சிங்களவர்கள் பெரும்பான்மை தமிழர்கள் சிறுபான்மை என்பதனை ஏற்றுக் கொண்டு பெரும்பான்மை சிங்களவர்கள் விரும்பினால் கிடைக்கக்கூடிய அதிகாரங்களை பகிர்ந்து பெற்றுக்கொள்ளும் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான சமஸ்ட்டி தீர்வுக்கு (ஒருபோதும் நடக்காது) தமிழர்கள் இணங்கினாலோ தமிழர்கள் ஒருபோதும் நாட்டை ஆள முடியாது என்பதுடன் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல கிழக்கில் முஸ்லீம்களுக்கும் எடுபிடிகளாகவும் அடிமைகளாவும் தான் இருக்க நேரிடும்.
தோல்வி மனப்பான்மையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் தமிழர்கள் வெளிவர வேண்டும்.
தமிழர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள், நாம் எடுக்கும் தீர்மானங்கள் உலக வல்லாதிக்க அரசுகள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் உண்டுபண்ணாது, எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது என்று 2005ல் தமிழர்கள் சிந்தித்திருந்தால்
இலங்கைத் தீவை மையப்படுத்தி இந்தியா - அமெரிக்க மற்றும் மேற்குலகம் - சீன தரப்புகளுக்கு இடையில் இன்று இடம்பெறும் பூகோள ஆதிக்கப்போட்டி நிலை சிலவேளை இன்று இருந்திருக்காது.
யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தார்கள் என்று கூறி இலங்கையை பாராட்டி 2009 செப்ரெம்பரரில் தீர்மானம் இயற்றிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கைக்கு எதிரான தீர்மானங்களும் வந்திருக்காது. 2013ல் டேவிட்கமருனின் யாழ் வருகையும் இடம்பெற்றிருக்காது.
ஆனால் நிச்சயம் புலிகளும், மக்களும் அழிக்கப்பட்டு இந்த முள்ளிவாய்க்கால் அழிவும் நடந்தேறியிருக்கும்.
அன்று 2005 நவம்பர் 18ற்கு முன்னர் இந்த இந்தியாவிடமும் மேற்குலகிடமும் புலிகள் கேட்டனர் - தமிழ்த் தேசத்தின் இறைமையயும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரியுங்கள் நீங்கள் விரும்பும் ஒருவரை ஆட்சிக்கு கொண்டுவர நாங்கள் உதவுகின்றோம் என்று. ஆனால் அவர்கள் அதற்கு காது கொடுக்கவில்லை.
அப்போது புலிகள் நீங்கள் தமிழ்த் தேசத்தின் இறைமையயும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்காத நிலையில் நாங்கள் யாரை ஆதரித்தாலும் எங்களை அழித்தே தீருவார்கள் ஆகவே அழிவுதான் முடிவு என்றால் நாங்கள் இந்தத் தேர்தலில் அமைதியாக இருக்கப் போகின்றோம். விளைவு எதுவென்றாலும் அதனை சந்திக்க நாம் தயார் என்றனர்.
அன்று புலிகளது கோரிக்கையை ஏற்று தமிழ்த் தேசத்தின் இறைமையயும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்திருந்தால் இந்தியாவிற்கும் மேற்கிற்கும் எதிரான சக்தியான சீனாவின் ஆதிக்கம் சிறீலங்காவில் அதிகரிப்பதனையும் தடுத்திருக்கலாம். தமிழனம் அழிவதனையும் தடுத்திருக்கலாம். இன்று ஐ.நாவில் சிறீலங்கா தொடர்பாக தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு சீனா ரஸ்யாவுடன் மல்லுக்கட்டும் நிலையும் எழுந்திருக்காது.
ஆனாலும் அன்று இந்த மேற்கும் இந்தியாவும் ஏற்க மறுத்த தமிழ்த் தேசத்தின் இறைமையயும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிப்பதன் ஊடாக மட்டுமே எதிர்காலத்தில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதியாவது சீனாவுடன் செல்லாது தடுப்பதற்கான ஒரே வழியாக உள்ளது.
ஆனால் இன்னும் அதுபற்றிச் சிந்திக்காது ஆட்சி மாற்றம் ஏற்படும் தமது கைப்பொம்மை ஒன்று ஆட்சிக்கட்டில் ஏறும் தமிழரை அங்கீகரிக்காமலே முழு இலங்கைத் தீவையும் தம்வசம் கொண்டுவரலாம் என இலகு காத்த கிளியாக மேற்கும் இந்தியாவும் சம்பந்தனின் துணையுடன் காத்திருக்கின்றன.
கிரானிலிருந்து மாணிக்கன்

0 Responses to கருணா பேரினவாதத்தின் கருத்தை ஒப்புவிக்கின்றார் - கிரானிலிருந்து மாணிக்கன்