Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மொழிப் போர் ஈகியர் நாள் இன்று காலை 10:30 மணிக்கு புதுச்சேரி ஆம்பூர் சாலை, அரசு பொது மருத்துவமனை எதிரில் பூரான்கள் இயக்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மொழிப் போரில் வீர மரணமடைந்த ஈகியர்களுக்கு வீரணக்கமும் மற்றும் தமிழ் மொழியை காக்க உறுதி மொழி ஏற்பும் நடைபெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வுக்கு இயக்கத்தின் தலைவர் பூரான். வீ. போன்ஸ் ரமேஷ் தலைமை தாங்கினார். சுடர் விளக்கை செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் நா.மு.தமிழ்மணி ஏற்றிவைத்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் தமிழர் களத்தின் மாநில அமைப்பாளர் கோ.அழகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பின்பு உறுதிமொழி ஏந்தி சபதம் செய்யப்பட்டது. முடிவில் முழக்கங்களுடன் இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றும் சூறுரைக்கப் பட்டது. நிகழ்வில் தாகூகலைக் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வபெருமாள், அலைகள் இயக்கம் பாரதி, மெல்லிசை கூட்டமைப்பு ஆனந்து, டிவி நகர் ராஜாஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.

0 Responses to மொழிப் போர் ஈகியர்களுக்கு புதுச்சேரியில் வீர வணக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com