Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வருடாந்த வரவு-செலவுத்திட்டம் தோற்றுபோனாலும், முன்னைய உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள் அல்லது தலைவர்களை தொடர்ந்து பதவியிலிருக்க வகைசெய்யும் சட்டமூல வரைவுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதால் கூட்டமைப்பினது உள்ளுராட்சி மன்றங்கள் சிலவும் தப்பித்துள்ளன.

தெற்கினில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 15 வரையிலான உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பதவிவிலக காரணமாக அமைந்த வரவு-செலவுத்திட்ட தோல்விகள் காரணமாக மஹிந்த அரசாங்கம் இந்த சட்டத்தை திருத்த முனைந்திருந்தது.

இரண்டு தடவைகள் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் பதவிவிலக வேண்டுமென 2013 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்த திருத்த பிரேரணையில் கூறப்பட்டிருந்தது.

இந்த சட்டத்தின் நோக்கம் உள்ளூராட்சி மன்ற தலைவர்களின் எதேச்சாதிகார போக்கை கட்டுப்படுத்துவதாகவே இருந்தது. ஆயினும், சுயநல நோக்கில் உள்ளூராட்சி தலைவர்களை பதவி விலக்குவதற்காக வரவு-செலவுத்திட்டங்கள்  தோற்கடிக்கப்படுவதை நிறுத்தவே இந்த சட்டத் திருத்தம் அவசியமானதாக மஹிந்த அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையினில் கூட்டமைப்பினது உட்கட்சி முரண்பாடுகளால் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருந்த பல உள்ளுராட்சி மன்றங்களும் தப்பித்துள்ளன.கடைசியாக கூட்டமைப்பின் வலி.கிழக்கு பிரதேச சபையினது வரவு செலவுத்திட்டம் அவ்வகையினில் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தப்பித்தன கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்கள்! புதிய அரசியல் சட்டமூலம் நிறைவேற்றம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com