குடியரசுத் தினத்தில் சென்னையில் வெடி குண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னையில் காமராஜர் சாலை, அண்ணா மேம்பால சாலை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை குடியரசுத் தினத்தை முன்னிட்டு குண்டு வெடிக்கும் என்று இன்று அதிகாலை காவல்துறை ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்து உள்ளார்.
அந்த மர்ம நபரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் காவற்துறை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அந்த மர்ம நபர் கோவை மாவட்டம் திருப்பத்தூர் சிம் கார்டில் இருந்து, சென்னையில் பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்த மர்ம நபர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
மர்ம நபரைத் தேடும் வேட்டை ஒருபுறம் இருந்தாலும், சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்வதை உறுதிப் படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to குடியரசுத் தினத்தில் சென்னையில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல்!