செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறையும் போக்குவரத்து துறையும் இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக விபத்துக்கள் நேரிடுகிறது என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது. தேசிய நெடும் சாலை விபத்து, மாநில நெடும் சாலை விபத்து, போக்குவரத்து சாலை விபத்து என்று பல விபத்துக்களுக்கு செல்போன் பேசியபடி இரு சக்கரம், அல்லது 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவது முக்கிய காரணமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம்.
இப்படி நடக்கும் விபத்துக்கள் தமிழகத்தில்தான் அதிகம் என்றும், கடந்த வருடம் நடைபெற்ற 10 ஆயிரம் சாலை விபத்துக்களில் 2ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மீதம் உள்ளவர்களில் காயம் அடைந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்கள் கை, கால் உறுப்புக்களை இழந்தவர்கள் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இதன் காரணமாக சென்னை மாநகர காவல்துறை, மற்றும் மாநகர போக்குவரத்துத் துறை செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி, ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்., செல்போன் பேசுவது மட்டுமல்ல, ஹெல்மெட்டுக்குள் ஹெட் செட்டை வைத்து கொண்டு பாட்டு கேட்டு சென்றாலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

0 Responses to செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து!