இலங்கை அரசினது கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு செய்தததைத்தான தற்போது மஹிந்த நியமித்துள்ள காணாமல் போன உறவுகளை தேடிக்கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள். இரண்டாவது நாளாக வன்னியினில் காணாமல் போனோரது குடும்பங்களது வாக்குமூலம் பதிவு செய்யும் பணி இடம்பெற்றிருந்தது.
வழமை போன்றே மக்களது வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதினில் ஆர்வம் காட்டாத குழுவினர் மக்கள் எடுத்து வந்த கடிதங்களது பிரதிகளை சேகரிப்பதன் மூலம் இதுவோர் கண்துடைப்பென அம்பலமாகியுள்ளது. குற்றம் செய்யதவர்கள் இருக்கையில் நிரபராதிகளான எங்களை எத்தனை தடவை தான் விசாரிப்பீர்கள் என காணாமல் போன உறவுகள் ஏற்கனவே இக்குழுவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கடந்த யுத்தத்தின் பின்னர், காணாமல் போன உறவுகள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும், பலரிடமும் பதிவுகளை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு அலைக்களிக்கப்பட்டே வருகின்றோம். இந்நிலையில், இப்போதும் பதிவிற்காக வந்தலைவதாக மக்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றமிழைத்தவர்கள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கையில், நிரபராதிகளான நாங்கள் எதற்காக விசாரிக்கப்பட வேண்டும். கடந்த ஐந்து வருடமாக ஜனாதிபதியாக இதே மகிந்தவே இருக்கின்றார். அவ்வாறிருக்கையில், எதற்காக மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறீர்கள். பதிவுகளை மேற்கொள்கின்றீர்கள். எங்களுக்கு எங்களுடைய உறவுகள் தான் வேண்டும். இதனைவிடுத்து வேறு எதுவும் வேண்டாம். ஆகவே, எங்களுடைய உயிர்களை எங்களிடமே மீண்டும் கொடுப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.எமது நிம்மதியான வாழ்விற்கு வழி விட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சர்வதேசத்தினை அம்பலப்படுத்தும் இலங்கை அரசினது இவ்விசாரணைக்குழுவினை அம்பலப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.
0 Responses to சர்வதேசத்ததை ஏமாற்றவே குழு! காணாமல் போனோர் குழுபற்றி உறவுகள்!!