'பலஸ்தீனின் நட்சத்திரம்' என்கிற அந்நாட்டு அரசாங்கத்தின் அதியுயர் விருதினை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று திங்கட்கிழமை வழங்கிக் கௌரவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவினர் யோர்தானுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு பலஸ்தீனத்துக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை சென்று சேர்ந்தனர்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இன்று பாலஸ்தீன அதியுயர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட அவர், இலங்கைக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to ‘பலஸ்தீனின் நட்சத்திரம்’ விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிக் கௌரவிப்பு