பாலியல் புகார் எழுந்ததன் எதிரொலியாகப் பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று மாலை உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி ஏ.கே.கங்குலி, தாம் வகித்து வந்த மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பயிற்சிக்கு வந்த பெண் வழக்கறிஞரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பயிற்சி வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்திடம் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிய தலைமை நீதிபதி, 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தார்.
அந்த குழுவும் புகாரில் உண்மை உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, மத்திய அரசிடம் இதை அறிவித்து இந்த விவகாரத்தில் இருந்து விலகிக் கொண்டது உச்ச நீதிமன்றம். இவர் மீது விசாரணையை தொடங்கலாமா என்று மத்திய உள்துறை அமைச்சகம், மற்றும் சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகிற வேளையில், ஏ.கே.கங்குலி வகிக்கும் மேற்கு வங்க மனித உரிமைத் தலைவர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யக் கூடாது என்கிற பொது நல மனுவும் இன்று உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதை அடுத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தமது மேற்கு வங்க மனித உரிமைத் தலைவர் பதவியை இன்று மாலை ராஜினாமா செய்துள்ளார் கங்குலி.

0 Responses to பாலியல் புகார் எதிரொலி:முன்னால் நீதிபதி ஏ.கே.கங்குலி பதவி விலகினார்!