Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாகாண சபைகளின் அதிகாரத்தை முற்றாக குறைக்கும் சர்ச்சைக்குரிய திவி நெகும திட்டத்தை உத்தியோகபூர்வமானமாக ஆக்கும் வகையிலான வர்த்தகமானி அறிவித்தல் இன்று வெளியாகவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதில் கைச்சாத்திடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சட்ட மூலம் சர்ச்சைக்குரியதாக காணப்பட்டது.

எனும்கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சட்ட மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த சட்ட மூலம் அமுலாக்கப்படும் பட்சத்தில், மாகாண சபைகளின் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும், திவி நெகும திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

இதனால் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கங்கள் அனைத்து ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் பொருட்டே முன்னதாக அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதறகான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருந்தது.

0 Responses to அமுலுக்கு வந்தது திவி நெகும திட்டம்!! மாகாணசபைக்கான அதிகாரங்கள் குறைப்பு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com