Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரப்போகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஊழல், பொருட்களின் விலையேற்றம் என்பன மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. இதற்கு தீர்வு காண்பது தான் முக்கியம் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் நிகழ்த்திய உரை பெரும் ஊடக கவனம் பெற்றிருந்ததுடன், பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரதமரின் உரை குறித்து தமது விமர்சனத்தை கூறி வருகின்றனர்.

பிரதமர் தனது செய்தியாளர் சந்திப்பின் போது 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்த மாட்டேன் எனவும், ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்தார்.

மேலும் 'காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால், அதற்கு ஏற்ற மிகச்சிறந்த தகுதி உடையவர் அவர். எமது ஆட்சி இன்னமும் வலுப்பெறும். ஆனால், ராகுல் காந்தி தான் தன்னை பிரதமராக நிறுத்திக் கொள்வதற்கு இன்னமும் அதிக பொறுப்புக்கள் தன் முன்னால் இருப்பதாக உணர்கிறார். அவருடைய எண்ணத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன்' என தெரிவித்திருந்தார்.

எனினும் 'மோடி  அடுத்த இந்திய பிரதமரானால் அது அழிவை நோக்கிய முடிவு. அஹ்மதபாத் தெருக்களில் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறைத்து முகமூடி அணிந்த படிதான் போட்டியிட வேண்டும். இவ்வாறானதொரு அதிகார சக்தி இத்தேசத்திற்கு தேவை என நான் நம்பவில்லை." என மோடியை கடுமையாக தாக்கியும் பேசியிருந்தார் பிரதமர்.

மேலும் 2014 லோக்சபா தேர்தலோடு தான் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருந்தார்.  2014 நாடாளுமன்ற தேர்தல், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்திக்கும் இடையில் நேரடிப் போட்டியாக அமையும் என இப்போதே அதிக ஊகங்கள் எழுந்துள்ளன.  இந்நிலையிலேயே அர்விந்த் கேஜ்ரிவால் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

0 Responses to 'இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது முக்கியமல்ல' : அர்விந்த் கேஜ்ரிவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com