Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள சபைக்கும் அதிகாரிகள் மட்டத்திற்குமிடையேயான இழுபறி தொடர்கின்ற நிலையில் நாளை வியாழக்கிழமை முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தனது அலுவலகத்தில் வடக்கு மாகாணப்பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.  

வடக்கு மாகாண சபை பதவியேற்று நான்கு மாதங்களின் பின்னர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடன், திணைக்களத் தலைவர்களையும் ஒரேநேரத்தில் முதலமைச்சர் முதல் தடவையாக நாளை சந்திக்கின்றார். வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்றது.

இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையைக் கைப்பற்றி ஒக்ரோபர் மாதம் ஆட்சி அமைத்திருந்தது. ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாளை வியாழக்கிழமையே முதல் தடவையாக வடக்கு மாகாண அரச நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர், மாகாணசபை நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடக்கு அதிகாரிகளுடன் முதல்வர் முதல் சந்திப்பு! நான்கு மாதங்களின் பின்னர் சாதனை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com