வடமேற்கு சீனாவில் உள்ள இஸ்லாமிய மதக் கோயில் (மசூதி) ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலியானதாகவும் மேலும் 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் வாழும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களின் பல குழுக்களில் ஹூய் இனத்தவரும் அடங்குவர். இந்நிலையில் நின்ஷியா பிரதேசத்திலுள்ள கையுயான் நகரின் மேற்கே உள்ள மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் பலியானவர்கள் இந்த ஹுய் இனத்தவரே என்றும் கூறப்படுகின்றது.
தற்போது இச்சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப் பட்டு வருகின்றன. மறைந்த மதத் தலைவர் ஒருவரை நினைவு கூறும் வைபவத்தில் உணவு பரிமாறப் படும் வேலையிலேயே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to சீனாவில் மசூதியில் நெரிசல்:14 பேர் பலி