சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கொழுவைநல்லூர். சென்னை அருகே கொளத்தூரில் அவரது சகோதரி தமிழரசியின் வீட்டில் தங்கிப் பணி செய்தார்..
ஈழத் தமிழர்களுக்காக தனது உயிரை தற்கொடையாக்கிய வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசின் இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்தி வரும் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் சிங்கள அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு தமிழீழ மக்கள் சார்பிலும், எமது விடுதலை இயக்கத்தின் சார்பிலும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகத் தமிழினத்தின் வரலாற்றில் அன்புத் தம்பி முத்துக்குமாருக்கு என்றுமே அழியாத இடம் உண்டு.அன்புத் தம்பியின் குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழீழ மக்களுக்கான ஏழு கோடி தமிழக உடன்பிறப்புக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டி நிற்கின்றன. உங்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு உலகத் தமிழினத்தின் வரலாற்றில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே தனித்துவமான இடம் உண்டு.

0 Responses to வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நாள்