Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழகத்தில் தைப்பூசத் திருநாள் வெகு கோலாகலமாக பக்தர்களால் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.

முருகனின் பிறந்த நட்சத்திரமான பூசம், தைத்திருநாளில் தைப்பூசமாக வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் சபரி மலைக்கு செல்வது போல முருகனின் அறுபடை வீடுகளுக்கும் மாலை அணிவித்துக் கொண்டு, பச்சை ஆடை உடுத்தி 41 நாட்கள்  விரதமிருந்து அறுபடை முருகனை தரிசிப்பது  வழக்கம்.

இன்றும் முருகனின் அறுபடை வீடுகள் பக்தர்கள் வெள்ளத்தால் அலைமோதுகின்றன. பக்தர்கள் பால்  காவடி,பன்னீர் காவடி, இளநீர் காவடி, பால் குடம் எடுத்தும் அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகள், மற்றும் கோயில்கள், வள்ளலார்  தலமான வடலூர் இராமலிங்க அடிகளார் மடம் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டு உள்ளன. வடலூர் இராமலிங்க அடிகளார் பிறந்த தினமும் இன்று அனுஷ்டிக்கப் படுவதால், அங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

0 Responses to இன்று முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருநாள் கோலாகலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com