நீதி வேண்டும் என்றால் போராட வேண்டும், அந்த போராட்டத்தில் உலக மக்களையும்
இணைத்து கொண்டு செல்ல வேண்டும் - மக்கள் போராட்டங்கள் விடுதலைக்கான பாதையை
அகல திறந்து விடும் என்ற கருத்திற்கு இணங்க இன்று பாரிஸில் குர்திஸ்தான்
மக்களின் நீதிக்கான போராட்டம் உதாரணமாக இருந்தது.
9 ஜனவரி 2013யில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 பெண் குர்திஸ்தான் அரசியல் செயல்பாட்டாளர்கள், சக்கின், ரோச்பின், லைலா ஆகியோரின் ஒரு ஆண்டு நினைவு இன்று நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்ட மக்கள், எழுச்சியுடன் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், மனிதநேய அமைப்புகள், விடுதலை அமைப்புகள் பங்கு பற்றினர்.
குர்திஸ்தான் மக்கள் பிரதிநிதிகளின் படுகொலை செய்யப்பட்டது போல், பாரிஸ் நகரில் 8 நவம்பர் 2012யில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் செயற்பாட்டாளர் பரிதி (மதின்தரன் நடராஜா) மற்றும் நாதன், கஜன் ஆகியோரின் நினைவையும் அவர்களுக்கான நீதியும் இந்த நினைவேந்தல், நீதிக்கான போராட்டத்தில்குர்திஸ்தான் மக்கள் அமைப்பினால் முன் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் பேசிய மக்கள் பேரவை செயற்பாட்டாளர் திருச்சோதி " சகோதர சகோதரிகளேஇ நாம் எல்லோரும் ஒரு இன மக்கள் - விடுதலைக்காக தமது தாய் நிலத்திற்காக போராடும் மக்கள் - பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழ் சகோதரர்கள் போல் தமது மக்களின் விடுதலைக்காக செயல்படும் போது படுகொலை செயப்பாட்ட இவர்கள் முவரும் எமது சகோதரிகள், இவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு நாம் எல்லோரும் போராடுவோம், எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தனது உரையில் கூறினார்.
"போராடினால் தான் விடுதலை கிடைக்கும், விடுதலை கிடைக்காத வரை அடுத்தவனுக்கு நாம் அடிமை"
- செய்தி தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு -

0 Responses to போராடினால் தான் விடுதலை கிடைக்கும், விடுதலை கிடைக்காத வரை அடுத்தவனுக்கு நாம் அடிமை!!