Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் - திருகேதீஸ்வரம் மனித புதைக்குழி தொடர்பில் இந்தியாவிடம் விளக்கமளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.மன்னார் புதைக்குழியில் மீட்கப்பட்டுள்ள எச்சங்கள் அனைத்தும் சந்தேகத்துக்குறியவையாக காணப்படுகின்றன.

அதில் சிறுவயதுடைய ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளயால், இது கண்டிப்பாக இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுடைய எச்சங்களாக இருக்கலாம் என்று சந்தேகம் அனைத்து தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது.ஆனால் அரசாங்கம் இந்த மனித புதைக்குழியை பார்வையிடுவதற்கு அனுமதி மறுத்து வருகின்றமையானது, இந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.எனவே இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வர தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மன்னார் திருகேதீஸ்வரம் மனித புதைக்குழி தொடர்பில் இந்தியாவிடம் விளக்கமளிக்கப்படும் - கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com