Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி இன்று திங்கட்கிழமை மீண்டும் தோண்டப்பட்டது. இதன்போதும், மூன்று எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றோடு குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு அண்மித்த வீதியொன்றில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக தோண்டப்பட்ட போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து இன்று வரை மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு அமைய இருபது தடவைகள் தோண்டப்பட்டு விட்டது. குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 31 ஏற்கனவே பொதிசெய்யப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மன்னார் மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் நாளையும் தொடரவிருக்கின்றன.

0 Responses to மன்னார் மனிதப் புதைகுழி இருபதாவது தடவை தோண்டப் பட்டது: இதுவரை 58 எலும்புக் கூடுகள் மீட்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com