Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அமைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட சிவில்  அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போதே, மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், அதனையும், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செல்வம் அமைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இந்தியா முன்னெடுத்துள்ள வீட்டுத் திட்டத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றமை மற்றும் மன்னாரில்  முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மண் அகழ்வு ஆகியவற்றையும் சுட்டிக்காட்டும் முகமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி மார்ச் 12ல் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com