Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் ஒரு மாத கால பரோலுக்கு, சிறைத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர் நளினி. இவர் தமது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் வயதான காலத்தில் தந்தையை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவுக்கு சிறைத்துறை இன்று பதில் அளித்து உள்ளது.

சிறைத் துறை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பதில் மனுவில், நளினி சிறையில் 2003ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை பல போராட்டங்களை நடத்தியவர் என்றும், இவரை வெளியில் விட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப் படும் என்றும் கூறப பட்டுள்ளது.

மேலும் காவல்துறை, மற்றும் நன்னடத்தை அதிகாரிகளும்  நளினியின் பரோலை பரிந்துரை செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

0 Responses to சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம்? நளினியை பரோலில் விட எதிர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com