Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 15.02.2014

பதிந்தவர்: தம்பியன் 15 February 2014

மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்து சேரும்.

ரிஷபம்
பணவரவு இருமடங்காகும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மிதுனம்
நூதனப் பொருட்சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வழக்குகள் சாதகமாகும். உடன் பிறந்தவர்களின் உள்ளத்தை அறிந்து நடந்து கொள்வது நல்லது.

கடகம்
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளம் மகிழ உறவினர்கள் நாடி வருவர். வியாபாரத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள்.

சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செய்யும் தொழிலில் சில மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாவிட்டாலும், திட்டமிடாத காரியம்ஒன்று நடைபெறும். பயணங்கள் பலன்தரும்.

கன்னி
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து முடிப்பதில் கவனம் தேவை.

துலாம்
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். எடுத்த காரியம் முடியும் வரை அதே சிந்தனையாக இருந்து காரியத்தை முடிப்பீர்கள். சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். புதிய பொருட்சேர்க்கை உண்டு.

விருச்சகம்
வடிவேலன் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிர்காலத்திற்காக சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

தனுசு
மனக்குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சி கூடும் நாள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். பணியாளர்களுடன் இருந்த பனிப்போர் விலகும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக முடிப்பீர்கள்.

மகரம்
கவலைகள் தீர கந்தனை வழிபட வேண்டிய நாள். உதவும்குணம் கொண்ட உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். வேலைப்பளு கூடும். நண்பர்களிடம் பழகும் போது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

கும்பம்
வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்
விடாப்பிடியாக எதையும் செய்து சாதிக்கும் நாள். நீண்ட நாளைய பிரச்சினைகள் சமாதானமாக முடியும். குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். வீடு மாற்றம் ஏற்படலாம். கடன்சுமை குறையும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 15.02.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com