சிறிலங்கா தொடாபான அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு கொள்கை மாற்றப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கருத்துக்களை வெளியிடுவதை, விட சிறிலங்கா அரசாங்கத்துடன் இது தொடர்பில் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உறவினை ஏற்படுத்திக் கொள்வதையே அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்தக் கூடாது. குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. சிறிலங்காவின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைத்து செயற்பட வேண்டம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 Responses to சிறிலங்கா தொடாபான அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு கொள்கை மாற்றம்!