ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குக் கயிறைத் தொட்டு விட்டுத் திரும்பியிருக்கும் ஏழு பேரின் விடுதலை, பலரின் மனதில் பால் வார்த்திருக்கிறது. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை பதிலாக இருக்க முடியாது என்கிறது சட்டப் புத்தகங்களில் மறைந்திருக்கிற மனிதம்.
இரக்க மனங்களின் எதிர்பார்ப்பும் ஆதங்கமும் கலந்த தவிப்பு முரட்டுச் சிறைக் கதவுகளை நெகிழ வைத்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வின் கண்ணீர்ப் பதிவு இது.
நீர் வற்றிய கண்கள், சுருங்கிய தோல், காலையில் இருந்து பலரையும் சந்தித்த களைப்பு... எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்போடு அழைக்கிறார் சோமணி. 23 ஆண்டு காலமாக தன் மகன் முருகன், மருமகள் நளினியின் விடுதலைக்காகத் தவமாய் தவமிருந்தவர். மரணத்தின் விளிம்பில் இருந்து தன்னுடைய மகன் உயிர் பிழைத்து விடுவான் என்ற செய்தி அவருடைய கண்களில் புது ஜீவனைத் தந்துள்ளது.
கனவு, எதிர்காலம் எல்லாமே அரித்ரா!
சோமணியின் உணர்ச்சிக் குவியலில் இருந்து... ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல்வரின் இந்த அறிவிப்பு உயிர் வந்த மாதிரி இருக்கு. ஒன்றரை மாசம் முந்தி லண்டனில் இருந்து வந்தேன். திரும்ப உசுரோட போவாமான்னு சந்தேகம் இருந்துச்சு. எப்படியும் மகனும், மருமகளும் விடுதலை ஆயிடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. மனசு நிம்மதியா இருக்கு. பெத்த பிள்ளையைத் தகப்பன் பிரிஞ்சிருக்கிறதும் தகப்பனைப் பிள்ளை பிரிஞ்சிருக்கிறதும் மிகவும் கொடுமை.
ஜெயில்ல என்னைப் பார்த்துட்டு நளினி ஆர்வத்தோடு ஓடி வந்தா. நளினி கேட்ட முதல் கேள்வி, அரித்ரா போட்டோ கொண்டு வந்தீங்களா?’. ஐயோ அம்மா... இருந்த பரபரப்புல நான் அதை மறந்துட்டேன்’னு சொன்னேன். புள்ளையோட புகைப்படத்தைக்கூட பார்க்க முடியாதவளாயிட்டேன்னு நளினி கதறி துடிச்சிட்டா.
அரித்ராவுக்கு இப்போது 22 வயது. லண்டனில் மருத்துவக் கல்லூரியில் நான்காவது வருஷம் படிக்கிறா. இலவசமா மருத்துவம் பார்க்கணும், யார் கிட்டேயும் காசு வாங்கக் கூடாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருக்கிறாள். இன்னும் தன்னோட அடையாளத்தை மறைச்சி வாழ்ந்திட்டிருக்கா. லண்டன்ல இருக்கிற தன் சக தோழர்கள் அவளை ஒதுக்கிடுவாங்களோன்னு ரொம்ப பயப்படுறா.
முருகன், நளினி ரெண்டு பேருக்கும் இப்ப இருக்கிற ஒரே நினைப்பு... அரித்ரா. அவங்களுடைய ஒரே சந்தோஷம், கனவு, எதிர்காலம் எல்லாமே அரித்ராதான். அதனால, லண்டன் போக வேண்டிய சூழல் உள்ளது. பாஸ்போர்ட், விசா கிடைக்கணும். பல பிரச்சினைகள் இருக்கு.
இனி வரும் காலத்தை தங்கள் பாச மகள் அரித்ராவோடு செலவு செய்யணும்னு இருவரும் விரும்புறாங்க. விடுதலைக்குப் பிறகு இருவரையும் திருப்பதி கோயிலுக்குக் கூட்டிட்டுப் போகணும். வேலூர்ல நண்பர்கள் உதவியோடு முருகன் - நளினிக்குத் திருமணத்தை நடத்தி, இருவரின் விடுதலைக்குக் காரணமான அனைவரையும் திருமணத்துக்கு அழைத்துச் சாப்பாடு போட்டு நன்றி கூறணும்னு ஆசை'' என்றார்.
என் மகன் என் தலைவன்!
குயில்தாசன் - அற்புதம்மாள் தம்பதியினரின் மகன்தான் பேரறிவாளன். சென்னைக்கும் வேலூருக்குமாய் பேரறி வாளனின் விடுதலைக்காக அற்புதம்மாள் அலைந்துகொண்டிருக்கிறார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசனிடம் பேசினோம்.
'பார்வை இழந்த ஒருவனுக்குப் பார்வை கிடைத்ததுபோல, பாலைவனப் புயலில் சிக்கி திசை தெரியாமல் நடந்து கொண்டிருந்தவனுக்குச் சோலை தென்பட்டது போல இருக்கிறது இந்தத் தீர்ப்பு.
நீதியரசர் சதாசிவத்துக்கும் அவருடைய குழுவினருக்கும் இந்த நேரத்தில் தலைவணங்குகிறோம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 24 மணி நேரத்தில் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து என் மகனை மீட்டுக் கொடுத்த தமிழக முதல்வரை வணங்குகிறேன்.
பேரறிவாளன் எனக்கு மகன் அல்ல. என்னுடைய தலைவன். சிறுவயதிலே எல்லோருக்கும் தொண்டாற்றக்கூடிய சிறந்த மாண்புகளைக் கொண்டவன். பெயருக்கு ஏற்றார்போல் அனைவருக்கும் உதவிசெய்து, ஊருக்காகப் பயன்பட்டுள்ளான். வீணாகக் காலத்தைக் கழிக்காமல் தொண்டு செய்துள்ளான். பிறருக்குக் கல்வி கொடுத்துள்ளான். ஒழுக்கத்தில், பேச்சில் அவனிடத்தில் எண்ணற்ற மாற்றங்கள். தலைமைப் பண்புகளை ஏற்று சிறந்த மனிதனாக உருவெடுத்திருக்கிறான். திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் நாங்கள். அரசியலை நுகர்ந்ததுகூட கிடையாது. எங்களால் போலியாக முகம் காட்டி நடிக்கத் தெரியாது.
ஒரு தந்தையாக மனைவி, குழந்தைகளோடு என் மகனைக் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. பேரறிவாளனுக்கு வரப்போகும் பெண் அவரைப் போலவே போராட்ட குணம்கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும். நால்வரும் இந்த சமூகத்துக்காக எதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு'' என்றார்.
''நளினியின் விடுதலைக்காக உயிரைப் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறேன்!''
நளினியின் தந்தை சங்கர நாராயணனுக்கு சொந்த ஊர், நெல்லை மாவட்டம் சங்கனாங்குளம். காவல் துறையில் இன்ஸ்பெக்டராக சென்னையில் அவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போது, ராஜீவ் படுகொலை சம்பவம் நடந்தது. போலீஸ் விசாரணை, சி.பி.ஐ. வழக்குப் பதிவு என நளினிமீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்ததும் பெற்ற பாசத்தை உதறி, மகளுடனான உறவைத் துண்டித்தார் சங்கர நாராயணன்.
ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை வேலூர் சிறைக்குச் சென்று மகளைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார். உடல்நலக் குறைவு காரணமாக அதன் பின்னர் அவரால் சென்னைக்குச் செல்ல இயலாமல் வீட்டிலேயே முடங்கிவிட்டார். இப்போது 87 வயதில், மகனுடன் வசிக்கிறார்.
பாபநாசம் அருகே உள்ள அம்பலவாண்புரத்தில் சுற்றம் நட்பைவிட்டு விலகி ஒதுங்கி வாழ்கிறார். கட்டிலில் படுத்தபடி, தொலைக்காட்சியில் வெளியான செய்தியை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருந்தவர், கண்ணில் வழியும் நீரை துடைத்தபடியே நம்மை வரவேற்றார்.
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குங்க. நளினியைப் பார்த்து ரொம்ப நாளாகிப் போச்சு. அவளை மறுபடியும் பார்க்க முடியுமா என்கிற ஏக்கம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. இப்போ அந்தத் துயரம் மனதில் இருந்து போயிடுச்சுங்க. என்னோட பேத்தியை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. அந்தக் குழந்தை இப்போ லண்டனில் டாக்டருக்குப் படிச்சுக்கிட்டு இருக்கு. ஒட்டுமொத்த குடும்பமும் இனியாவது ஒன்றாக இருக்க வாய்ப்பு கிடைச்சுருக்கு. இதுக்காகத் தமிழக அரசுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.
கடைசி காலத்தில் எனக்கு துணையா இருக்கணும்னு நளினி பரோல் கேட்டதா சொன்னாங்க. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ வந்தா கூடவே போலீஸ்காரங்க வருவாங்க. பத்து, இருபது பேருக்குச் செலவு செய்ற அளவுக்கு எனக்கு வசதி கிடையாது. என்னோட பென்ஷன் பணத்துலதான் நானும் என் மகனும் வாழுறோம்.
என்னோட இன்னொரு பொண்ணும் பையனும் சென்னையில் இருக்காங்க. அவங்க நளினியை வரவேற்பாங்க. முடிஞ்சா சென்னைக்குப் போவேன். அல்லது அவங்க இங்கே வந்து என்னைப் பார்ப்பாங்க. பல வருஷத்துக்குப் பிறகு மகளைச் சந்திக்க இருப்பது, உடம்பில் புது வலுவைத் தந்திருக்கு'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
ரவியோட நினைப்பிலயே அவங்க அப்பா இறந்து போனார்!
அருப்புகோட்டையில் வாழ்ந்து வருகிறார் ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி. கணவனை இழந்துவிட்டார். சிறையில் வாடும் மகனின் நினைவை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் அவருடைய குரலில் நெகிழ்ச்சி. ''ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல்வர் அம்மாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஐயாவுக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டு இருக்கோம்.
நாங்க இந்த 23 ஆண்டுகளாகப் படாத கஷ்டங்கள் இல்லை. ரவிச்சந்திரன் நினைப்பிலயே அவர் அப்பா இறந்துபோயிட்டார். அவங்க அப்பா இறந்ததற்குத்தான் பரோல்ல வெளியே வர முடிந்தது. என் காலம் முடிவதற்குள்ள அவன் வெளியே வந்துடுணும்னு வேண்டாத கோயில் இல்லை.
ரவி, 'கஷ்டபடாதம்மா... நான் எந்த தப்புமே செய்யல. கண்டிப்பா வெளியே வந்துடுவேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பான். இப்ப ரவிக்கு 45 வயசு ஆரம்பிக்கப்போகுது தம்பி. அவன் வெளியே வந்த உடனே கல்யாணம் பண்ணி வெச்சுடணும். அவனுடைய இளமைக் காலம் எல்லாமே போயிடுச்சு. முதல்வர் அம்மா இவங்களை எல்லாம் வெளியே விட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து இருக்காங்க. என் பையன் ஜெயில்ல இருந்து வெளியே வரக் குரல் கொடுத்த அத்தனைப் பேருக்கும் ரொம்ப நன்றி'' என ஆனந்தக் கண்ணீருடன் பேசி முடித்தார்.
மகளை என் கையில் அள்ளிக்கொள்வேன்!
நளினியின் தாயார் பத்மா சென்னையில் இருக்கிறார். அவர் மனம் நெகிழ பேசினார். ''நான் வணங்கிய கடவுள் என்னைக் கைவிடவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் இந்த நடவடிக்கையை மனிதநேயம் என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட முடியாது. அவருடைய இந்த நடவடிக்கை எங்களுடைய இதயத்தை நிரப்பி உள்ளது.
என் உடலின் ஒவ்வொரு செல்லும் அவருக்கு நன்றி சொல்கிறது. எங்களுக்காகப் போராடிய தலைவர்கள், தமிழ் உள்ளங்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்கிறேன். நன்றி என்ற வார்த்தையால் இப்போதைய என்னுடைய உணர்வை சொல்லிவிட முடியாது.
என் மகள் வெளியே வந்ததும், அவளை என் கையில் அள்ளிக்கொள்வேன். அவள் அவளுடைய மகளை அள்ளிக்கொள்வாள். ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அரசாங்கத்துக்குகூட அந்த உரிமை இல்லை.
இனி இந்த நாட்டில் தூக்குத் தண்டனையே கூடாது. என்னுடைய பேத்தி அரித்ராவிடம் இந்தத் தகவலை இன்னும் தெரியப்படுத்தவில்லை. அவள் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருப்பதால், தேர்வு முடிந்ததும் தெரியப்படுத்தலாம் என்று இருக்கிறேன் என்றார்.
23 ஆண்டு சிறையில் இருந்தவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. அதில் கண்ணீரும் கவலையுமாக மனிதர்கள் இருக்கின்றனர். தவிப்பும் ஏக்கமுமாக சில மனங்கள் இருக்கின்றன.

0 Responses to நீதியின் முன் தவமிருக்கும் கண்ணீர் பூக்கள்! விடைபெறுமா 23 ஆண்டு சோகம்?