ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணமானது 24.02.2014 இன்று 27வது நாளாக வெற்றிக்கரமாக தொடர்கின்றது. மனிதநேயப் பணியாளர்கள் இன்று அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டார்கள். இன்றைய தினம் நோர்வே நாட்டினுடைய பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் சிற்றூர்ந்து பரப்புரை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தற்கதாகும்.
எதிர்வரும் 26.02.2014 அன்று தமிழர்களுடைய தேசிய விடுதலை இயக்கமாகத் திகழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி Luxembourgகில் அமைந்துள்ள ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களும் ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்தில் சமூகமளித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் மட்டுமன்றித் தமிழினத்தின் நீதிக்காகப் போராடிய விடுதலை இயக்கமுமாகும் என ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்திற்கு கூற வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரதும் வரலாற்றுக் கடமையாகவும் காலத்தின் கட்டாயமாக திகழ்கின்றது.
நீதிமன்றத்தினுடைய முகவரி: Palais de la Cour de justice ,Boulevard Konrad Adenauer, Kirchberg L-2925, Luxembourg நடைப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேயப் பணியாளர்கள் தமது ஐந்தம்சக் கோரிக்கையில் ஐந்தாவது கோரிக்கையாக „மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.“ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள் ஆகையால் நடைப்பயணத்தை முன்னெடுக்கின்ற மனிதநேயப் பணியாளர்களும் ஐரோப்பாவினுடைய உச்ச நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

0 Responses to நீதியை நிலை நாட்ட 27வது நாளாக ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்