சிறிலங்காவில் இறுதிப்போரின்போது இடம் பெற்ற இராணுவ அத்துமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசு எதிர்வரும் மார்ச்சு மாதத்திற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்காதுவிட்டால் நாம் உலக நாடுகளின் உதவியுடன் ஐ.நாவில் அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம் என பிரித்தானிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்திக்கு தெரிவித்துள்ளது.
எஸ்.ஜெயானந்தமூர்த்தி சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின்போது இடம் பெற்ற தமிழின அழிப்பு தொடர்பாகவும் அதற்குப் பின்னர் இன்று வரை தமிழர் தாயகப் பகுதியான வடகிழக்கில் இடம் பெற்று வரும் தமிழினத்திற்கு எதிரான சிறிலங்காவின் கடும்போக்குத் தொடர்பாகவும் பிரித்தானிய அரசுக்கு தெரியப்படுத்தி வருகின்றார். ஈமெயில் மற்றும் கடிதம் மூலமாக அவர் மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைக்கு பிரித்தானிய அரசும் அவ்வப்போது பதிலளித்து வருகின்றது.
அண்மையில் அவர் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தாங்கள் பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு சிறிலங்காவுக்குச் சென்று வந்துள்ளீர்கள் அங்குள்ள தமிழ் மக்களின் நிலை பற்றி நேரில் பார்த்துள்ளீர்கள். அது மாத்திரமின்றி சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை ஆட்சியையும் நேரில் கண்டுள்ளீர்கள். எனவே இந்த விஐயத்திற்குப் பின்னரான தங்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை அக்கடிதத்தில் அவர் எழுப்பியிருந்தார்.
அவரின் இந்த கடிதத்திற்கு பிரதமர் டேவிட் கமரூனின் உத்தரவின் பேரில் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பொறுப்பாளர் கிளேறி ஸ்கனேல் பிரித்தானிய அரசின் நிலைப்பாடு தொடர்பாக எஸ்.ஜெயானந்தமூர்த்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ள கிளேறி ஸ்கனேல் மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது 'பிரமதர் டேவிட் கமரூன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலமே சிறிலங்காவின் பல மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடிந்தது. இம்மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளாது விட்டிருந்தால் சிறிலங்காவில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களை உலகுக்குக் காட்டத் தவறியிருப்போம்.
சிறிலங்காவில் இறுதிப்போரின்போது பல்வேறு வகையான இராணுவ மீறல்கள், மனித உரிமை மீறல்கள் என்பன இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக சுயாதீன விசாரணை நடைபெறவேண்டுமென ஐ.நாவின் பிரதிநிதி நவநீதம்பிள்ளை அம்மையார் முன்வைத்துள்ள கருத்தையும் நாம் ஏற்றுக்கொண்டு அதற்கு நாம் அழுத்தம் கொடுக்கின்றோம். எனினும் சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான மீறல்கள் தொடர்பாக இன்று வரை சுதந்திரமான விசாரணை நடைபெறவில்லை.
இது தொடர்பாக சிறிலங்காவின் ஐனாதிபதியை நேரில் சந்தித்த பிரதமர் டேவிட் கமரூன் தமது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். போரின்போது போரியல் விதிமுறைகளை மீறியதற்கு அர்த்தமுள்ள பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அரசியல் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இராணுவ ஆக்கிரமிப்பு இல்லாத சுதந்திரமான ஆட்சிமுறை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் போருக்குப் பின்னரான இக்காலப்பகுயிலும் இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றம் இழைத்தோருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், பாலியல் துஸ்பிரயோகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இவை அனைத்துமே நிறுத்தப்பட வேண்டும். என கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு இவற்றைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் மார்ச் மாதம் ஐ.நாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்தும் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம்' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to நடவடிக்கை எடுக்கத்தவறினால் சர்வதேச விசாரணைக்கு அழுத்தம்